Daniel Balaji :தனது இறப்பை முன்கூட்டியே கணித்த டேனியல் பாலாஜி! என்ன சொன்னார் தெரியுமா?

Daniel Balaji Death Latest News In Tamil : தமிழ் திரைப்பட நடிகர் டேனியல் பாலாஜி, மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதை தொடர்ந்து ரசிகர்கள் பலர் சோகமடைந்துள்ளனர். இவர், தனது இறப்பு குறித்து முன்கூட்டியே பேசியுள்ளார். என்ன கூறியிருக்கிறார் தெரியுமா

Written by - Yuvashree | Last Updated : Mar 30, 2024, 12:44 PM IST
  • தமிழ் சினிமாவின் பிரபல வில்லன் நடிகர், டேனியல் பாலாஜி
  • இவர், 48 வயதில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்
  • தனது மரணம் குறித்து முன் கூட்டியே கணித்திருக்கிறார் டேனியல் பாலாஜி
Daniel Balaji :தனது இறப்பை முன்கூட்டியே கணித்த டேனியல் பாலாஜி! என்ன சொன்னார் தெரியுமா? title=

Daniel Balaji Death Latest News In Tamil : கோலிவுட் திரையுலகில் பயங்கர வில்லன் நடிகர்களுள் ஒருவராக இருந்தவர் டேனியல் பாலாஜி. கமல் ஹாசன், விஜய், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லனாக நடித்திருந்தார். இவருக்கு நேற்று மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அவரது உடல், அஞ்சலிக்காக புரசைவாக்கத்தில் உள்ள வரதம்மல் காலணி எனும் இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இவரது உடலுக்கு வெற்றி மாறன், கெளதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். 

பயங்கரமான வில்லன் நடிகர்..

டேனியல் பாலாஜிக்கு ‘டேனியல்’ என்ற பெயர் வந்ததற்கு காரணம், அவர் ‘சித்தி’ தொடரில் நடித்த அந்த கதாப்பாத்திரம்தான். இதையடுத்து தொடர்ந்து சில சீரியல்களில் முக்கிய கதாப்பாத்திரமாக நடித்து வந்த இவர், அதன் பிறகு வில்லன் நடிகராக உருவானார். கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கிய ‘காக்க காக்க’ படத்தில் வில்லனாக நடித்த இவர், அடுத்து கமல் ஹீரோவாக நடித்த ‘வேட்டையாடு விளையாடு’ படத்தில் அமுதன் என்ற சைக்கோ கொலைகாரனாக நடித்திருந்தார். இந்த படத்திற்கு பிறகு அவரது புகழ் உச்சத்திற்கு சென்றது. 

இதையடுத்து, தனுஷ் உடன் பொல்லாதவன் படத்திலும் வட சென்னை படத்திலும் நடித்தார். இதனால், இயக்குநர் வெற்றிமாறனுக்கு நெருக்கமான நபர்களுள், ஒருவராகவும் மாறினார். கெளதம் வாசுதேவ் மேனன் படங்களிலும் தொடர்ந்து நடித்தால் அவருக்கு பிடித்த நடிகராகவும் இருந்தார். இவரது நடிப்பை ரசிப்பதற்கென்று தனி கூட்டமும் உள்ளது. 

மேலும் படிக்க | பிரபல நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் உயிரிழந்தார்

இறப்பு குறித்து பேசியவர்..

டேனியல் பாலாஜி உயிரிழந்ததை தொடர்ந்து, தற்போது அவர் கொடுத்த நேர்காணல்கள் மற்றும் பதிவுகள் வைரலாகி வருகின்றன. இந்த நிலையில், அவர் முன்கூட்டியே தனது இறப்பு குறித்து ஒரு நேர்காணலில் பேசியுள்ளதும் வைரலாகி வருகிறது. 

டேனியல் பாலாஜி, கொரோனா பரவல் சமயத்தில் அத்தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார். அப்போது திரும்பி வந்து விடுவோம் என்ற நம்பிக்கையில் மருத்துவமனைக்கு சென்றதாகவும், ஆனால் தனது உடல் நிலை மிகவும் மோசமானதாகவும் அந்த நேர்காணலில் தெரிவித்தார். தான் மருத்துவமனையில் சேர்ந்த 4வது நாள், இறக்கும் தருவாய்க்கு சென்று பின்பு கடவுளின் கருணையால் மீண்டு வந்ததாக சிரித்துக்கொண்டே தெரிவித்தார். 

Daniel Balaji

மேலும், பிறப்பு என்று ஒன்று இருந்தால் இறப்பு என்ற ஒன்றும் இருந்துதான் ஆகும் என்றும் ஈசியாக கூறும் அவர், தன்னை கொரோனா தாக்கியபோது தன் நண்பனை அழைத்து வீட்டு சாவியை கொடுத்தாகவும், ஒரு சில தொலைபேசி எண்களை கொடுத்து, தனக்கு ஏதாவது நேர்ந்தது என்றால் அவர்களிடம் தெரிவிக்குமாறும் கூறியிருக்கிறார். தங்களுக்கு கடைசி கட்டம் என்று தெரிந்து விட்டால் அந்த சமயத்தில் பதறி எதுவும் ஆகப்போவதில்லை என்று கூறிய அவர், தான் அந்த நிலையில் இருந்த போதும் நிதானமாகத்தான் செயல்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறார். 

ஆவடியில் காேயில்..

நடிகர் டேனியல் பாலாஜி, பல ஆண்டுகளாக தனிமையிலேயே வாழ்ந்து வருகிறாராம். அது தனக்கு பழகி விட்டதாகவும் கூறுகிறார். இவர், ஆவடியில் கோயில் ஒன்றை கட்டியிருக்கிறார். இதற்காக தான் சம்பாதித்த பணத்தை செலவு செய்திருக்கிறார். அந்த கோயிலுக்கு இயக்குநர் வெற்றிமாறன் கூட, சென்று வந்திருக்கிறார். டேனியல் பாலாஜி கோயில் கட்டிய விஷயம் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியில் தெரிய வந்த போது, இவரை பலரும் பாராட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | Daniel Balaji : இறந்த பின்பும் டேனியல் பாலாஜி செய்த நல்ல காரியம்..! என்ன தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News