விஜய் ஆண்டனியின் மகள் இறப்பிற்கு காரணம் இதுதான்..பகீர் கிளப்பும் சுசித்ரா!

Singer Suchitra : இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள், கடந்த ஆண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில், அதற்கான காரணம் குறித்து சுசித்ரா தனது நேர்காணலில் கூறியிருக்கிறார்.   

Written by - Yuvashree | Last Updated : May 20, 2024, 03:42 PM IST
  • இறந்து போன விஜய் ஆண்டனியின் மகள்
  • வைரலாகும் சுசித்ராவின் பேச்சு!
  • என்ன சொன்னார் தெரியுமா?
விஜய் ஆண்டனியின் மகள் இறப்பிற்கு காரணம் இதுதான்..பகீர் கிளப்பும் சுசித்ரா! title=

Singer Suchitra : பாடகி சுசித்ராவின் சமீபத்திய நேர்காணர்கள் தான் தற்போது இணையதளத்தில் டிரெண்டிங் டாப்பிக்காக இருக்கிறது. கார்த்திக் குமார், தனுஷ், திரிஷா, விஜய் குறித்து இவர் கூறியுள்ள செய்திகள் எல்லாம் கடந்த ஒரு காலமாக இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் இவர் தற்போது விஜய் ஆண்டனியின் இறந்து போன மகள் குறித்து பேசி இருக்கிறார். அவர் கூறியுள்ள விஷயங்கள் சினிமா உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. 

விஜய் ஆண்டனியின் மகள்: 

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகி இப்போது நடிகராகவும் வளர்ந்து கொண்டிருப்பவர் விஜய் ஆண்டனி. இவருக்கு இரு மகள்கள் இருந்தனர். இதில் 16 வயது நிரம்பிய விஜய் ஆண்டனியின் மூத்த மகள், கடந்த ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி தனது தந்தையின் அருகில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் விஜய் ஆண்டனியின் குடும்பத்தில் மட்டுமின்றி, தமிழ் தமிழ் திரையுலகினர் மத்தியிலும், தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிறுமியின் தற்கொலைக்கான காரணங்கள் குறித்து இணையதளங்களில் வெவ்வேறு தகவல்கள் வைரலான நிலையில் இதற்கு விஜய் ஆண்டனியின் தரப்பில் இருந்து பதில் ஏதும் தெரிவிக்கப்படாமல் இருந்தது. 

தன் குழந்தை இறந்த புதிதிலேயே தன்னால் யாரும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என, தன் பட வேலைகளில் மும்முறமாக இறங்கிய விஜய் ஆண்டனி, தொடர்ந்து படங்களை நடித்து வருகிறார். மக்களும் குழந்தையின் தோண்டுவதை காரணம் குறித்து தூண்டுவதை விட்டுவிட்டு அவரவர் வேலையை பார்க்க தொடங்கினார். இந்த சமயத்தில் தான் பாடகி சுசித்ரா கூறிவரும் தகவல்கள் பலர் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. 

மேலும் படிக்க | “நான் Gay-வா?” சுசித்ராவிற்கு பதிலடி கொடுத்த கார்த்திக் குமார்! வைரல் வீடியோ..

சுசித்ரா கூறிய விஷயம்:

பாடகி சுசித்ரா சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட போது விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலை குறித்து பேசி இருக்கிறார். அதில், விஜய் ஆண்டனி தான் ஹீரோவாக நடிப்பதற்காக உடலில் பல்வேறு அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளதாகவும், இதேபோன்று தானும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என்று அவரது மகள் விரும்பியதாகவும் கூறியிருக்கிறார். இது குறித்து விஜய் ஆண்டனியிடம் அவர் பேசிய போதெல்லாம், வெளிநாட்டிற்கு சென்று  இதற்கு ஏற்பாடு செய்வதாக விஜய் ஆண்டனி கூறியதாகவும் பேசி இருக்கிறார். 

Suchitra

காரணம்…

தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக விஜய் ஆண்டனிடம் அவரது மகள் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை குறித்து பேசியதாகவும் அப்போது விஜய் ஆண்டனி அவரிடம் கோபமாக பேசியதாகவும் கூறி இருக்கிறார், சுசித்ரா. இதை அடுத்துதான், குழந்தை தற்கொலை செய்து கொண்டதாக கூறி இருக்கிறார். 

இது உண்மையா? 

நடிகர் விஜய் ஆண்டனி தன்மகள் இறப்பிற்கு பிறகு அது குறித்து எங்குமே வெளியில் பேசவில்லை. தன் மகள் இறப்பிற்கு பிறகு அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், இறந்து போன மகளின் பெயரில் பல நல்ல காரியங்களை செய்ய உள்ளதாகவும் தன்மகள் தன்னுடனே இருப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தார் விஜய் ஆண்டனி. பெரிய இழப்பை சந்தித்து இருந்த அவர் எந்த அளவுக்கு துன்பப்பட்டிருந்தார் என்பது அனைவரது கண்ணுக்கும்  தெரிந்தது. சிறுமியின் தற்கொலைக்கு காரணம், அவர் நீண்ட நாட்களாக மன அழுத்தத்தில் இருந்தது தான் என்பதும் மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டது. இந்த நிலையில் எந்தவித அடிப்படை ஆதாரமும் இன்றி சுசித்ரா பேசியிருப்பது மக்கள் மத்தியில் கண்டனங்களை எழுப்பியிருக்கிறது. 

(தற்கொலைக்கு முயல்வது எதற்கும் முடிவல்ல: தற்கொலை எண்ணங்கள் எழுந்தால், சினேகா அமைப்பின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்புக் கொள்ளலாம். மேலும், தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104 க்கும் தொடர்புகொண்டு நீங்கள் பேசலாம்.)

மேலும் படிக்க | ‘தளபதி 69’ படத்தின் நாயகி இவர்தான்! விஜய்யை விட 21 வயது இளையவர்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News