Thalapathy 66 update: நடிகர் விஜய், மாஸ்டர் படத்துக்கு பிறகு நெல்சன் இயக்கும் பீஸ்ட் படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் முடிந்துள்ள நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தற்போது நடிகர் விஜய் (Actor Vijay) நடிக்கும் 66-வது (Thalapathy 66) படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளத. அதன்படி பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி (Vamshi Paidipally) தளபதி 66 படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ALSO READ | Rolls Royce tax case: நடிகர் விஜய்க்கு விதித்த அபராதத்திற்கு இடைக்கால தடை
இயக்குனர் வம்சி ஏற்கனவே தமிழில் கார்த்தி நடித்த தோழா படத்தை இயக்கி உள்ளார். இதுதவிர தெலுங்கிலும் மகேஷ்பாபு நடித்த மகிரிஷி, ராம்சரண் நடித்த எவடு, ஜூனியர் என்.டி.ஆர். நடித்த பிருந்தாவனம், பிரபாஸ் நடித்த முன்னா ஆகிய படங்களை இயக்கி உள்ளார்.
நேற்று வம்ஷி பைடிபள்ளி தனது 42-வது பிறந்தநாளை கொண்டாடினார். இவருக்கு ரசிகர்களும், பிரபலங்களும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர். 'தளபதி 66' படத்திற்காக அவர் விஜய்யுடன் இணைவார் என்று முன்னரே யூகிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பாடகர் கிரிஷ் இந்த தகவலை தனது ட்வீட் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார். இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை.
தளபதி 66 படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தை 5 மொழிகளில் (தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம்) நேரடி படமாக எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையில் பாடகர் கிரிஷ் செய்த இந்த ட்வீட்டை நீக்கியுள்ளார். ஆனால் அதன் ஸ்கிரீன் ஷாட் சமூக ஊடகங்களில் வலம் வருகிறது.
ALSO READ | தம்பி விஜய் அவர்களை எங்கள் வாழ்நாளில் மறக்க மாட்டோம் -கமீலா நாசர் நெகிழ்ச்சி!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப் பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR