தளபதி 66 படப்பிடிப்பு எப்போது? வெளியான தகவல்!

வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 66 படத்தின் டெஸ்ட் ஷூட் முடிந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Apr 4, 2022, 05:51 PM IST
  • பீஸ்ட் ஏப்ரல் 13-ம் தேதி வெளியாக உள்ளது.
  • இதனை தொடர்ந்து விஜய் வம்சி இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
  • இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்க உள்ளது.
தளபதி 66 படப்பிடிப்பு எப்போது? வெளியான தகவல்! title=

நெல்சன் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக ஏப்ரல் 13ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.  சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆக்ஷன் மற்றும் நகைச்சுவை கலந்து உருவாகியுள்ள இந்த படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், அபர்ணா தாஸ், யோகி பாபு போன்ற பலர் நடித்துள்ளனர்.  இந்த படத்தை திரையில் காண ரசிகர்கள் பலரும் ஆர்வமாக காத்துக்கொண்டிருக்கும் நிலையில் 'தளபதி-66' படம் குறித்த எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.  இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில், தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளில் உருவாகப்போகும் படத்தில் நடிகர் விஜய் ஒப்பந்தமாகியுள்ளதாக முன்னரே தகவல்கள் வெளியானது.

மேலும் படிக்க | 4 கார் இருக்கும்போது சைக்கிள்ல போனது ஏன்?- விஜய் பதில்?!

அதனைத்தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு குறித்து எந்த தகவல்களும் வெளியாகவில்லை என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் இப்படம் குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளது.  அதாவது தற்காலிகமாக 'தளபதி-66' என்று பெயரிடப்பட்டு இருக்கும் இந்த திரைப்படத்தின் டெஸ்ட் ஷூட்டை நடிகர் விஜய் நடித்து முடித்துள்ளதாகவும், இந்த வாரத்தில் சிறிய ஷெட்யூலில் படப்பிடிப்பு தொடங்கும் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.  இப்படத்தின் மூலம் இதுவரை தமிழ் ரசிகர்களை மகிழ்வித்து வந்த நடிகர் விஜய் தெலுங்கு ரசிகர்களையும் மகிழ்விக்கவிருக்கிறார்.

மேலும் இந்த படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க தமன்னா, திஷா பதானி மற்றும் க்ரிதி சனோன் போன்றவர்களின் பெயர்கள் அடிபட்டு வருகிறது.  ஏற்கனவே நடிகை தமன்னா விஜயுடன் இணைந்து 'சுறா' படத்தில் நடித்திருந்தார், 'தளபதி-66'ல் இவர் நடித்தால் இது இவருக்கு விஜயுடன் இணையும் இரண்டாவது படமாக அமையும்.  'தளபதி-66' படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தில் ராஜு தயாரிக்கிறார்.  மேலும் 'தளபதி-67' படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க | பீஸ்ட் டிரெய்லரை பார்த்த கேஜிஎப் இயக்குனரின் ரியாக்சன்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News