பில்டர் கொலை வழக்கில் மார்க் மகன்கள் கைது: தவமாய் தவமிருந்து சீரியலில் அடுத்த டிவிஸ்ட்

தவமாய் தவமிருந்து சீரியல் அப்டேட்: பில்டர் கொலை வழக்கில் மார்க்கின் மகன்களை காவல்துறை கைது செய்வதால், தவமாய் தவமிருந்து சீரியலில் அடுத்த டிவிஸ்ட் ஏற்பட்டுள்ளது. இதனால் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.     

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 22, 2023, 12:31 PM IST
  • பில்டர் கொலை வழக்கில் கைது
  • மகன்கள் கைதால் அதிர்ச்சியாகும் மார்க்
  • தவமாய் தவமிருந்து சீரியல் அப்டேட்
பில்டர் கொலை வழக்கில் மார்க் மகன்கள் கைது: தவமாய் தவமிருந்து சீரியலில் அடுத்த டிவிஸ்ட் title=

ராஜாவுக்கு மகன் கொடுத்த அதிர்ச்சி

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் தவமாய் தவமிருந்து. இந்த சீரியலில் கடந்த வாரம் பாண்டியின் அப்பா மலர் கொடுத்த அதிர்ச்சியால் காலமாகிறார். ஆனால், ராஜாவை தவிர மற்ற மூவரும் செய்த கொலையை ஒப்பு கொள்ள முடிவெடுக்கின்றனர். ராஜா மனம் மாறாமல் அப்படியே இருக்கிறார். அவருக்கு அவருடைய மகன் ஒரு அதிர்ச்சியைக் கொடுக்க, திடீரென தன்னுடைய முடிவில் இருந்து அவனும் அவனும் மனதை மாற்றி கொண்டான்.

மேலும் படிக்க | ரவுடி காந்தாராவின் நெற்றியில் துப்பாக்கியை வைக்கும் ரங்கநாயகி! செம டிவிஸ்ட் 

மார்க்கிடம் மன்னிப்பு கேட்கின்றனர்

அதனை தொடர்ந்து இவர்கள் அனைவரும் மார்க் காலில் விழுந்து செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்கின்றனர். அதன்பின்னர் வீட்டு பத்திரத்தை அவரிடமே ஒப்படைத்து விடுகின்றனர். இந்த சூழலில் தான் வரும் நாட்களில் நடக்க போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதாவது, அந்த வீடியோவில் எல்லாரும் மார்க் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கின்றனர். அவரும் இதுவரை நடந்த தவறுகளை மன்னித்து அப்படியே விட்டு விடலாம் என முடிவெடுக்கிறார்.

பிள்ளைகளை கைது செய்யும் போலீஸ்

இப்படி பிரச்சனை எல்லாம் ஓய்ந்தது என நினைக்கையில் நால்வரும் சேர்ந்து பில்டரை கொன்று விட்டதாக சொல்லி போலீஸ் அவர்களை கைது செய்கிறது. இதனால் அதிர்ச்சி அடையும் மார்க், தனது மகன்களை காப்பாற்ற வழக்கறிஞராக களத்தில் இறங்குவாரா? என்ற உட்சகட்ட கேள்வி எழுந்துள்ளது. இதனால், அடுத்து என்ன நடக்கும் என்ற கோணத்தில் சீரியல் கதைக்களம் நகர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே தவமாய் தவமிருந்து சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க | மாரி அப்டேட்: வேலை வாங்கிய தாரா டீம்.‌. விஷத்தை வைத்து அதிர்ச்சி கொடுத்த மாரி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News