மாரி அப்டேட்: வேலை வாங்கிய தாரா டீம்.‌. விஷத்தை வைத்து அதிர்ச்சி கொடுத்த மாரி

Maari Today's Episode Update: மிரட்டி வேலை வாங்கிய தாரா டீம்.‌. விஷத்தை வைத்து அதிர்ச்சி கொடுத்த மாரி - மாரி இன்றைய எபிசோட் அப்டேட்

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 21, 2023, 02:01 PM IST
  • மாரி : இன்றைய எபிசோட்.
  • மிரட்டு தாராவின் டீம்
  • அதிர்ச்சி கொடுக்கும் மாரி.
மாரி அப்டேட்: வேலை வாங்கிய தாரா டீம்.‌. விஷத்தை வைத்து அதிர்ச்சி கொடுத்த மாரி title=

தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘மாரி’ சீரியல்.

மாரி : இன்றைய எபிசோட்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் முருகன் ஜாஸ்மினை சாட்டையால் அடித்து வீட்டு வேலைகளை செய்ய ஒப்புக்கொள்ள வைத்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

மிரட்டு தாராவின் டீம் 

அதாவது ஜாஸ்மின் வீட்டை பெருக்குவது, துடைப்பது என மொத்த வேலைகளையும் செய்கிறாள். பிறகு மாரி ரூமிலேயே இருக்க ஒரு மாதிரி இருக்கு என்று சொல்லி கீழே இறங்கி வர அங்கு இருக்கும் தாராவின் டீம் நீ ஜாஸ்மின் வேலை வாங்குறியா? என்னைக்குமே நீ இந்த வீட்டுக்கு வேலைக்காரி தான் என்று சொல்லி மிரட்டுகின்றனர்.

மேலும் படிக்க | தமிழ் நடிகர்களின் முதல் 100 கோடி வசூல் திரைப்படம்.. இதோ முழு லிஸ்ட்

அதிர்ச்சி கொடுக்கும் மாரி

மேலும் எங்களுக்கு போய் ஜூஸ் எடுத்துட்டு வா என்று சொல்லி அனுப்ப மாரி எதுவும் பேசாமல் சென்று ஜூஸ் போட்டுக் கொண்டு வந்து கொடுத்துவிட்டு எப்படி இருக்கு என்று கேட்க என்ன பேசலாம் ஒரு மாதிரி இருக்கு பயம் விட்டு போச்சா என கேள்வி கேட்க சாகப் போறவங்களை பார்த்து நான் எதுக்கு பயப்படணும்? ஜூஸில் விஷம் கலந்து விட்டதாக சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறாள். 

Maari Serial Update

ஜூசை குடித்த நான்கு பேரும் பதற்றமாக கடைசியில் விஷம் ஏதும் கலக்கவில்லை சும்மா சொன்னதாக மாரி கூறுகிறாள். இந்த நேரம் சூர்யா மாரி கேட்டபடி வளையலை வாங்கி வர அதைப் பார்த்து தாரா டீம் கடுப்பாகின்றனர். 

காணத்தவறாதீர்கள்

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மாரி சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

மாரி: சீரியலை எங்கு பார்ப்பது?

மாரி சீரியல் 2022 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

மேலும் படிக்க | மீண்டும் நாகசைதன்யாவுடன் இணையும் சமந்தா? இன்ஸ்டா பதிவால் குழப்பத்தில் ரசிகர்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News