தி ஃபேமிலி மேன் 3 வெப் சீரிஸ் ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!

தி ஃபேமிலி மேன் வெப் சீரிஸின் இரண்டு பாகங்களும் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற நிலையில் இந்த சீரிஸின் மூன்றாம் பாகத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.  

Written by - RK Spark | Last Updated : Apr 2, 2022, 09:50 AM IST
  • ஃபேமிலி மேன் வெப் சீரிஸ் மிக பெரிய ஹிட் அடித்தது.
  • முதல் சீசனை விட இரண்டாவது சீசன் நல்ல வரவேற்பை பெற்றது.
  • விரைவில் 3வது சீசன் வெளிவர உள்ளது.
தி ஃபேமிலி மேன் 3 வெப் சீரிஸ் ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!  title=

மனோஜ் பாஜ்பாய் நடிப்பில் வெளியான ஃபேமிலி மேன் வெப் சீரிஸ் மிக பெரிய ஹிட் அடித்தது, இந்த தொடரின் இரண்டு பாகங்களுமே அதிகளவில் வெற்றி பெற்று மக்கள் மத்தியில் பாராட்டையும் பெற்றது.  இத்தொடரின் முதல் பக்கத்தில் ஸ்ரீகாந்த் திவாரி சத்யா எனும் கதாபாத்திரத்தில் உளவுத்துறை அதிகாரியாக நடித்திருந்தார்.  அதனைத்தொடர்ந்து வெளியான இரண்டாவது சீஸனும் மிக பிரபலமானது, இதில் சமந்தா முன்னணி வேடத்தில் ராஜி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.  இந்த இரண்டாவது தொடரின் முடிவில் இன்னும் கூறப்படாத பல விஷயங்கள் உள்ளது, அடுத்த சீசன் வெளியாகும் என்கிற தகவலும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் படிக்க | பேருந்து ஓட்டும் கேஜிஎஃப் ஹீரோவின் அப்பா - கோடிகளில் சம்பளம் பெறும் யாஷ்

இதனால் ரசிகர்கள் இத்தொடரின் மூன்றாவது பாகம் எப்போது வெளியாகும் என்று எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.  இத்தொடரின் மூன்றாவது சீசன் குறித்து வெளியான சில தகவல்களின் அடிப்படையில் இதன் கதை தற்போதைய கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் சீனாவுடனான தொடர்புகள் குறித்து இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  கோவிட் தொற்றை பயன்படுத்தி சீனா இந்தியாவை எவ்வாறு திசை திருப்ப முயல்கிறது என்பதை பற்றிய கதையாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.  ஏற்கனவே மனோஜ் பாஜ்பாய் இத்தொடரின் மூன்றாவது சீசனுக்கான கதை தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்திருந்தார்.

மேலும் அந்த மூன்றாவது சீசனில் நடிகர் ஸ்ரீகாந்த் திவாரியாக மீண்டும் நடிப்பார் என்றும் கூறினார்.  இந்த சீஸனின் வெளியீடுக்கு அமேசான் ப்ரைம் வீடியோ எப்போது பச்சைக்கொடி காட்டும் என்று ராஜ் மற்றும் டிகே உள்ளிட்ட தி ஃபேமிலி மேன் குழுவினர் ஆவலுடன் காத்திருப்பதாகவும் அவர் கூறினார்.  தற்போது வெளிவந்துள்ள செய்தி என்னவென்றால் இந்த ஆண்டின் இறுதிக்குள் இப்படத்தின் பணிகள் நிறைவடைந்து, அடுத்த ஆண்டு ஓடிடி இயங்குதளத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது, இந்த சீசன் நிச்சயம் இந்த ஆண்டு வெளிவராது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  முதலில் வெளியான இரண்டு சீசன்களுக்கு கிடைத்த வரவேற்பை போலவே இந்த சீசனுக்கும் வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | பீஸ்ட் படத்தில் விஜய்யின் பெயர் இதுதான்! வெளியான தகவல்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News