லேட்டா வந்தாலும் மாஸாக வரும் 'தி லெஜண்ட்' - 7 மாதங்களுக்கு பின்... எந்த ஓடிடியில் தெரியுமா?

The Legend OTT Release: கடந்தாண்டு ஜூலை மாதம் திரையரங்கில் வெளியாகி வரவேற்பை பெற்ற 'தி லெஜண்ட்'  திரைப்படம், இன்று பிரபல ஓடிடியில் வெளியாக உள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Mar 3, 2023, 12:20 PM IST
  • பெரும் நட்சத்திர பட்டாளமே இதில் நடித்திருந்தது.
  • நான்கு மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது.
  • ஓடிடியில் ரிலீஸை அடுத்து பலரும் வரவேற்பு அளித்துள்ளனர்.
லேட்டா வந்தாலும் மாஸாக வரும் 'தி லெஜண்ட்' - 7 மாதங்களுக்கு பின்... எந்த ஓடிடியில் தெரியுமா? title=

The Legend OTT Release: தொழிலதிபர் சரவணன் அருள் நடிப்பில் உருவான ஆக்சன் திரைப்படம் 'தி லெஜெண்ட்'. ஜே.டி-ஜெர்ரி இயக்கத்தில் உருவான இந்த படத்தில் நடிப்பதற்கு முன்னரே சரவணன் அருள் மக்கள் மத்தியில் தொலைக்காட்சி விளம்பரம் மூலம் அறிமுகமாயிருந்தார். எனவே, இந்த படத்தை பலரும் பெரும் ஆர்வத்துடன் எதிர்பார்த்தர்.

கலவையான விமர்சனம்

இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுடலா, கீத்திகா திவாரி, பிரபு, சுமன், நாசர், விவேக், ரோபோ ஷங்கர், யோகி பாபு, வம்சி கிருஷ்ணா, தம்பி ராமையா, விஜயகுமார் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்தனர்.  ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த படத்திற்கும் வழக்கம்போல கலவையான விமர்சனங்கள் கிடைத்தது.  படம் ரொமான்ஸ், சண்டை காட்சிகள் மற்றும் சென்டிமெண்ட் என கலவையாக இருந்தது. பலரும், லெஜண்ட் சரவணாவின் முயற்சியை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.  'தி லெஜெண்ட்' திரைப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி என ஐந்து மொழிகளில் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 2500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் கடந்தாண்டு ஜூலை 28ஆம் தேதி வெளியானது. 

மேலும் படிக்க | நடிகை சுஷ்மிதா சென்னுக்கு மாரடைப்பு: ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை

ஓடிடிகளுக்கு இடையே போட்டாபோட்டி?

இந்த படத்திற்கு தியேட்டர் ரிலீஸை போன்று, ஓடிடி ரிலீஸ் குறித்தும் எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனா், ஜூலை மாதம் வெளியான திரைப்படம் ஆறு மாதங்களை கடந்தும் ஓடிடி பக்கம் ஒதுங்கவில்லை. இந்த படத்தை வாங்க ஓடிடி நிறுவனங்களுக்கு இடையே போட்டாபோட்டி நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. 

அந்த வகையில்,'தி லெஜண்ட்' படம் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் இன்று மதியம் 12.30 மணிக்கு வெளியாக உள்ளது. படம் திரையரங்கில் வெளியாகி 7 மாதங்களுக்கு பிறகு இத்திரைப்படத்தை, ஹாட்ஸ்டார் வெளியிட உள்ளது. இதுகுறித்து, லெஜண்ட் சரவணா இன்று ட்விட்டரிலும் அறிவித்துள்ளார். இதையடுத்து, நெட்டிசன்கள் பலரும் அவருக்கு தங்களின் வாழ்த்தை தெரிவித்து வருகின்றனர்.

திரையரங்கை போன்றே ஓடிடியிலும் இத்திரைப்படம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும் என கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், ஹாட்ஸ்டாரில் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.  

மேலும் படிக்க | Thalaivar 170: ரஜினியின் அடுத்த படத்தின் இயக்குனர்! வெளியானது மாஸ் அப்டேட்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News