செல்வராகவன் நடிக்கும் சாணிக்காயிதம் படத்தின் சூட்டிங் நிறைவு

செல்வராகவன் முதல்முறையாக கதாநாயகனாக நடிக்கும் சாணிக்காயிதம் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக அப்படக்குழு அறிவித்துள்ளது

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 18, 2021, 09:23 PM IST
  • செல்வராகவன் முதல்முறையாக கதாநாயகனாக நடிக்கும் சாணிக்காகிதம் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக அப்படக்குழு அறிவித்துள்ளது
  • இயக்குனர் செல்வராகவன் முதல் முறையாக நடிகராக அறிமுகமாவுள்ள திரைப்படம்
  • அருண் மாதேஸ்வரர் இயக்கத்தில் ஏற்கனவே தயாராகியுள்ள ‘ராக்கி’ என்ற படமும் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது
செல்வராகவன் நடிக்கும் சாணிக்காயிதம் படத்தின் சூட்டிங் நிறைவு title=

Saani Kaayidham Shoot Warpped: செல்வராகவன் (Selvaragavan) முதல்முறையாக கதாநாயகனாக நடிக்கும் சாணிக்காயிதம் (Saanikaayidham) படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக அப்படக்குழு அறிவித்துள்ளது. 

இயக்குனர் தியாகராஜன் குமாரராஜாவின் ஆரண்ய காண்டம் என்ற படத்தில் உதவி இயக்குநராகவும்,  இறுதிச்சுற்று படத்தின் வசன எழுத்தாளருமான  அருண் மாதேஸ்வரன் செல்வராகவனையும் கீர்த்தி சுரேஷையும் வைத்து ‘சாணிக் காயிதம்’ (Saanikaayidham) படத்தை இயக்கி வருகிறார். 

இயக்குனர் செல்வராகவன் முதல் முறையாக நடிகராக அறிமுகமாவுள்ள திரைப்படம் 'சாணிக்காயிதம் '. செல்வராகவனின் பிறந்தநாளான மார்ச் 5ஆம் தேதி இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.  தன்னை மையப்படுத்தி எடுக்கும் படங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் தற்போது சாணிக்காகிதம் படத்தில் நடித்து வருகிறார்.  

ALSO READ | தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் விஜய்?

இப்படத்தின் இயக்குனர் அருண் மாதேஸ்வரர் இயக்கத்தில் ஏற்கனவே தயாராகியுள்ள ‘ராக்கி’ என்ற படமும் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.  வசந்த் ரவி, பாரதிராஜா போன்ற நடிகர்கள் ராக்கி படத்தில் நடித்துள்ளனர்.  இப்படம் வெளியாகும் முன்பே,  'சாணிக்காகிதம்' படத்தையும் பிசியாக இயக்கி வருகிறார். ராக்கி படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.  

தற்போது சாணிக்காகிதம் படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக அப்படக்குழு  அறிவித்துள்ளது. விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.  சமீபத்தில் விஜய்யின் பீஸ்ட் படத்தில் செல்வராகவன் முக்கிய வில்லனாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

 

Trending News