ஓடிடியில் வெளியாகும் இரண்டு சூப்பர் ஹிட் தமிழ் படங்கள்..! வீக் எண்டில் எதை பார்க்கலாம்..?

கோலிவுட் சினிமாவை திரும்பி பார்க்க வைத்த இரண்டு தமிழ் படங்கள் இன்று ஓடிடியில் வெளியாகிறது. 

Written by - Yuvashree | Last Updated : Aug 11, 2023, 08:31 AM IST
  • சில வாரங்களுக்கு முன்பு வெளியான இரண்டு சூப்பர் ஹிட் படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகிறது.
  • இரண்டு படங்களும் வசூலில் சக்கை போடு போட்டன.
  • அந்த படங்களை எந்த தளத்தில் எப்படி பார்க்கலாம்..?
ஓடிடியில் வெளியாகும் இரண்டு சூப்பர் ஹிட் தமிழ் படங்கள்..! வீக் எண்டில் எதை பார்க்கலாம்..?  title=

திரையரங்கிற்கு சென்று படங்களை பார்ப்பதை விட, ஒடிடியில் வெளியாகும் படங்களை வார இறுதியில் குடும்பத்தினருடன் அமர்ந்து பார்ப்பது தற்போது புது வழக்கமாகி விட்டது. ஒரு சில திரைப்படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியாவதும், ஒரு சில படங்கள் திரையரங்கில் வெளியாகி சில நாட்களுக்கு பிறகு ஓடிடியில் வெளியாவதும் வழக்கமாகி வருகிறது. அந்த வகையில், புதிதிாக வெளிவந்த இரண்டு சூப்பர் ஹிட் தமிழ் படங்கள் இன்று ஓடிடியில் வெளியாகின்றன. 

போர் தொழில்:

சமீப காலங்களில் வெளிவந்த த்ரில்லர் திரைப்படங்களிலேயே மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்த படம், போர் தொழில். பிரபல நடிகர் அசோக் செல்வன் கதையின் நாயகனாக வந்தார். நடிக்க சரத்குமார் இப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். நிகிலா விமல் கதையின் நாயகியாக வந்திருந்தார். படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று திரையரங்கில் வெற்றிகரமாக பல நாட்களை கடந்தது. 

மேலும் படிக்க | கோடி கோடியாய் வசூலை குவிக்கும் ஜெயிலர்..! முதல் நாளே இவ்வளவு கலெக்‌ஷனா..?

Maaveeran-Por Thozhil

ஓடிடி ரிலீஸ்:

சைக்கோ த்ரில்லர் கதையில் உருவான ‘போர் தொழில்’ திரைப்படம், ஜூன் மாதம் 9ஆம் தேதி திரைக்கு வந்தது. நல்ல விமர்சனங்களை பெற்றதால் இப்படத்தை பார்க்க மக்கள் தியேட்டர்களில் குவிந்த வண்ணம் இருந்தனர். இந்த படம், ஓடிடியில் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், படத்தின் வசூல் தடைப்பட கூடாது என எண்ணிய படக்குழு, ஓடிடி ரிலீஸை சில வாரங்கள் தள்ளி வைத்தது. கடைசியில் ஆகஸ்டு 11ஆம் தேதியான இன்று இப்படம் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. தமிழ் மட்டுமன்றி பல மொழி படங்கள் மற்றும் தொடர்களை ஒளிபரப்பும் ‘சோனி லிவ்’ தளத்தில் இந்த படம் இன்று முதல் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது. 

வசூல் எவவ்ளவு? 

போர் தொழில் திரைப்படத்தை காண கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் ஆனா நிலையிலும் படத்தை பார்க்க ரசிகர்கள்  திரையரங்குகளுக்கு படையெடுத்த வண்ணம் இருந்தனர்.  முதல் நாளில் இப்படம் உலகம் முழுவதும் சுமார் 85 லட்சம் வரை வசூலித்திருந்ததாக தகவல்கள் வெளியானது. இரண்டாம் நாளில் சராசரியாக 1.60 கோடி வரை இப்படம் கலெக்ட் செய்துவிட்டது. படம் பார்த்த மக்கள் பாசிடிவான விமர்சனங்களை அளித்ததால், இப்படத்திற்கு மவுசு கூடியது. தற்போது வரை, இப்படம் 24.57 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்‌ஷனின் காசை அள்ளியுள்ள இப்படம், மிகவும் குறைவான படஜெட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் ப்ரொடக்‌ஷன் செலவுகள், நடிகர்களின் சம்பளம் எல்லாம் சேர்த்து சுமார் 6 கோடி ரூபாய் செலவிலேயே இப்படம் உருவாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

மாவீரன்:

சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்திருந்த படம், மாவீரன். இந்த படத்தை மடோன் அஷ்வின் இயக்கியிருந்தார். படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்திருந்தார். பிரபல நடிகை சரிதா, குக் வித் கோமாளி புகழ் மோனிஷா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். தமிழ் பட இயக்குநரும் நடிகருமான மிஷ்கின் வில்லனாக வந்தார். இப்படம் ஆரம்பம் முதலே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வசூலை வாரிக்குவித்தது. 

ஓடிடி ரிலீஸ்:

மாவீரன் படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த ரெஸ்பான்ஸை பார்த்த படக்குழு அதன் ஓடிடி ரிலீஸை விரைவிலேயே அறிவிக்க முடிவு செய்தது. அதன்படி, படம் ஆகஸ்டு 11ஆம் தேதியான இன்றுமுதல் மாவீரன் படம் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது. ஏற்கனவே திரையர்ங்கில் இப்படத்தை பார்த்தவர்கள், மீண்டும் ஒருமுறை இதனை ஓடிடியில் பார்க்க ஆர்வமுடன் உள்ளனர். 

வசூல்:

சுமார் 35 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான மாவீரன் திரைப்படம் ரிலீஸான முதல் நாளில் 8 முதல் 10 கோடி ரூபாய் வரை வசூல் செய்ததாக கூறப்பட்டது. இதே போல இரண்டாம் நாளில் மேலும் 10 கோடியும், மூன்றாள் நாளில் 12 முதல் 14 கோடி ரூபாயையும் இப்படம் வசூல் செய்தது. தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 50 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து மாவீரன் படம் சாதனை படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் படிக்க | ரஜினி பட தயாரிப்பாளருக்கு 6 மாதம் சிறை தண்டனை..! அதிர்ச்சியில் கோலிவுட் பிரபலங்கள்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News