ஓடிடியில் வெளியாகிறது ‘மாவீரன்’ படம்..! எந்த தளத்தில் எப்படி பார்க்கலாம்..?

Maaveeran OTT Release Date: சிவகார்த்திகேயன் மற்றும் அதிதி ஷங்கர் நடிப்பில் வெளியாகியிருந்த ‘மாவீரன்’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.   

Written by - Vijaya Lakshmi | Last Updated : Aug 7, 2023, 10:57 AM IST
  • ‘மாவீரன்’ படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்திருக்கிறார்.
  • தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 50 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் சாதனை.
  • ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் மாவீரன் திரைப்படம் வெளியிடப்படுகிறது.
ஓடிடியில் வெளியாகிறது ‘மாவீரன்’ படம்..! எந்த தளத்தில் எப்படி பார்க்கலாம்..? title=

மாவீரன் OTT வெளியீட்டு தேதி: நடிகர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) நடிப்பில் கடந்த ஜூலை 14 ஆம் தேதி திரையரங்கில் வெளியான படம் மாவீரன் (Maaveeran). இவருக்கு ஜோடியாக நடிகை அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடித்திருந்தார். தற்போது ‘மாவீரன்’ திரைப்படம் ஓடிடி வெளியீடு குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

‘மாவீரன்’ திரைப்படம்..
‘மாவீரன்’ படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்திருந்தார். சரிதா, மோனிஷா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்க, இயக்குநரும் நடிகருமான மிஷ்கின் வில்லனாக இப்படத்தில் வந்தார். தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வசூல் மழையிலும் நனைந்து வருகிறது, மாவீரன் திரைப்படம்.

மேலும் படிக்க | எகிறிய மார்க்கெட்! கவினுக்கு போட்டிப் போடும் இளம் நாயகிகள்: ஸ்டார் பட அப்டேட்

வசூல் நிலவரம்..
35 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான மாவீரன் திரைப்படம் ரிலீஸான முதல் நாளில் 8 முதல் 10 கோடி ரூபாய் வரை வசூல் செய்தது. அதேபோல் இரண்டாம் நாளில் மேலும் 10 கோடியும், மூன்றாள் நாளில் 12 முதல் 14 கோடி ரூபாய் வசூலித்து மாஸ் காட்டியது. மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வரும் இப்படம் உலகம் முழுவதும் தற்போது வரை சுமார் 75 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாக கூறுகின்றனர்.அதிலும் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 50 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் சாதனை படைத்துள்ளதாக தகவல் வெளியானது.

ரசிகர்களின் கருத்து..
மாவீரன் படத்தை பார்த்த பல ரசிகர்கள் படம் முழுக்க சிரிப்பு வெடிகளாக உள்ளதாகவும் கொடுத்த காசுக்கு நல்ல படத்தை பார்த்த உணர்வு இருந்ததாகவும் தெரிவித்திருந்தனர். மேலும், படத்தின் முதல் பாதி போனதே தெரியவில்லை என்றும் இரண்டாம் பாதி மிகவும் நீளமாக இருந்ததாகவும் படம் பார்த்தவர்கள் கூறி இருந்தனர். 

ஓடிடியில் வெளியீடு..!
இந்நிலையில் தற்போது மாவீரன் திரைப்படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காதிருக்கின்றனர். அதன்படி இந்த மாதம் அதாவது ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் மாவீரன் திரைப்படம் வெளியிடப்படுகிறது. மேலும் இது குறித்து தற்போது அதிகாரப்பூர்வ தகவல் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதனால் ரசிகர்கள் மீண்டும் ஒருமுறை ஓடிடி தளத்தில் இந்த படத்தை காண ஆவலுடன் உள்ளனர்.

அடுத்த படம்..
இதற்கிடையில் மாவீரன் படத்தின் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயன் தற்போது கமல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் நடித்துவருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருக்கும் சிவகார்த்திகேயனின் அயலான் படம் தீபாவளிக்கு திரைக்குவரவிருக்கிறது. இந்தப் படத்தையடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இந்தப் படம் குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்த 1947 ஆகஸ்ட் 16 பட விழாவில் சிவகார்த்திகேயன் பேசியிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | ஜெயிலர் ஓவியம் வரைந்து உலக சாதனை! ரஜினிகாந்துக்கு தமிழ் சினிமா ரசிகரின் பரிசு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News