சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு காத்திருக்கும் டிரீட்!!

சிவகார்த்திகேயன் நடிக்கும் 14-வது படத்தின் டைட்டிலை ஏ.ஆர்.ரஹ்மான் இன்று மாலை வெளியிட உள்ளார்.

Updated: Feb 3, 2020, 01:26 PM IST
சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு காத்திருக்கும் டிரீட்!!

சிவகார்த்திகேயன் நடிக்கும் 14-வது படத்தின் டைட்டிலை ஏ.ஆர்.ரஹ்மான் இன்று மாலை வெளியிட உள்ளார்.

இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் அவரது 14வது திரைப்படம் கடந்த 2018-ஆம்  ஆண்டு ஜூன் மாதத்தில் துவங்கியது. கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்தப் படம் சயின்ஸ் பிக்‌ஷனாக உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் ரகுல் ப்ரீத் சிங் ஹீரோயினாக நடிக்கிறார். இவர்களுடன் கருணாகரன், யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை, நீரவ் ஷா ஒளிப்பதிவு என பிரமாண்டமாக உருவாகி வருகிறது. மேலும் ஹாலிவுட் படங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்ட ‘அலெக்சா எல்.எப்.’ என்ற கேமரா, இந்தப் படத்தில் பயன்படுத்தப்படுகிறது. இந்த கேமரா பயன்படுத்தப்படும் முதல் தமிழ் படம் இதுதான்

இந்தப் படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் ஆக்‌ஷன் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் தற்போது படத்தின் டைட்டிலை இன்று மாலை 5 மணிக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிடுவார் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.