நான் ‘லியோ’ இனிமே என் பேரு தளபதி 67 இல்ல! விஜய் திரைப்படத்தின் பெயர் சூட்டு விழா

Bloody Sweet Leo: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அக்டோபர் மாதம் வெளியாக இருக்கும் லியோ படத்தின் டைட்டில் வெளியீட்டு விழா நெல்லையில் விஜய் ரசிகர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டது... கேக் வெட்டி ஆட்டம் பாட்டத்துடன் திரையரங்கை அதிரவிட்ட ரசிகர்கள்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 3, 2023, 08:56 PM IST
  • லியோ படப் பெயர் அறிவிப்பை கொண்டாடும் விஜய் ரசிகர்கள்
  • ப்ளடி ஸ்வீட் என செல்லம் கொஞ்சும் ரசிகர்கள்
  • தளபதி 67 இனி லியோ என மாறியது
நான் ‘லியோ’ இனிமே என் பேரு தளபதி 67 இல்ல! விஜய் திரைப்படத்தின் பெயர் சூட்டு விழா

Leo Celebration By Vijay Fans: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அக்டோபர் மாதம் வெளியாக இருக்கும் லியோ படத்தின் டைட்டில் வெளியீட்டு விழா நெல்லையில் விஜய் ரசிகர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டது கேக் வெட்டி ஆட்டம் பாட்டத்துடன் திரையரங்கை அதிரவிட்ட ரசிகர்கள் அதகளப்படுத்தினார்கள். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் அவரது 67 வது படத்தில் நடிகைகள் திரிஷா, பிரியா ஆனந்த் உள்ளிட்டோரும், நடிகர்கள் அர்ஜூன், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

இந்த புதிய படத்திற்கு கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு வகையான போஸ்டர்கள் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டு வந்தது. புதிய படத்திற்கான டைட்டில் வெளியீடு இன்று மாலை இருக்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டடது. இந்த நிலையில், நெல்லை சந்திப்பு பகுதியில் அமைந்துள்ள ராம் சினிமாஸ் திரையரங்கில் விஜய் மக்கள் மன்றத்தினர் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் சார்பில் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மேலும் படிக்க | Leo - Bloody Sweet: பெயர் காரணம்... LCU... மறைமுக தகவல்கள் என்னென்ன?

திரையரங்கில் குவிந்த ரசிகர்கள் ஆட்டம் பாட்டம் என திரையரங்கை தெறிக்க விட்டனர். தளபதி 67 படத்திற்கான டைட்டில் வெளியிட்டாய் பிரம்மாண்ட திரையில் ராம் சினிமாஸ் திரையரங்கத்தினர் ஒளிபரப்பு செய்தனர்.

புதிய படத்தின் பெயர் லியோ எனவும், அக்டோபர் 19ஆம் தேதி அந்த படம் வெளியாகும் என அறிவிப்பு வெளியிடபட்டதை ரசிகர்கள் ஆடி பாடி கொண்டாடினர், இதனை தொடர்ந்து திரையரங்கில் தளபதி 67 லியோ என பெயர் பொறிக்கப்பட்ட கேக் வெட்டப்பட்டு ரசிகர்கள் ஒருவருக்கு ஒருவர் இனிப்பை ஊட்டி விட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

மேலும் படிக்க | Thalapathy 67 - Code Red: சொன்னதை செய்த லோகேஷ்... 100% தளபதி படம்

மாஸ்டர் படத்தை போன்று இப்படத்திற்கும் ஆங்கிலத்தில் பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும், 2 நிமிடம் 48 விநாடிகள் உள்ள அறிவிப்பு வீடியோவில் விஜய் Bloody Sweet என கூறுவது டைட்டில் கார்டிலும் இடம்பெற்றுள்ளது.

இதையடுத்து, படத்தின் பெயர் காரணம் குறித்தும், டைட்டில் வீடியோவில் கொடுக்கப்பட்ட மறைமுக தகவல்கள் குறித்து பல்வேறு கருத்துகள் வெளியாகியுள்ளன. 

லியோ என்றால் லத்தின் மொழியில் சிங்கம் என்று அர்த்தம் என கூறப்படுகிறது. 12 ராசிகளிலே உள்ள சிம்ம ராசியின் ஆங்கில பெயரும் 'LEO' என்பது கவனிக்கத்தக்கது.

மேலும் படிக்க | Thalapathy 67 Official Title: வெளியானது அதிகாரப்பூர்வ பெயர்... Bloody Sweet!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

More Stories

Trending News