மார்ச் மாதம் OTT-ல் வெளியாகும் சாணிக்காயிதம்?

செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'சாணிக்காயிதம்' படம் மார்ச் மாதம் அமேசான் OTT தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 17, 2022, 06:51 PM IST
  • செல்வராகவன் கதாநாயகனாக அறிமுகமாகி இருப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
  • 1980களின் பின்னணியில் நடக்கும் க்ரைம் ஸ்டோரியாக இப்படம் உருவாகியுள்ளது.
மார்ச் மாதம் OTT-ல் வெளியாகும் சாணிக்காயிதம்? title=

'ராக்கி' படத்தின் மூலம் திரைத்துறையில் இயக்குனராக அறிமுகமான அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் செல்வராகவன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சாணிக்காயிதம்'.  இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் 'செட்டில்மென்ட் சாம்பவி' என்கிற மிரட்டலான கதாபாத்திரத்தில் செல்வராகவனின் தங்கையாக நடித்துள்ளார்.  இதுவரை இயக்குனராக இருந்த செல்வராகவன் இப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி இருப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் படிக்க | ஒரே நாளில் வெளியாகும் செல்வராகவனின் இரு படங்கள்!

1980களின் பின்னணியில் நடக்கும் க்ரைம் ஸ்டோரியாக இப்படம் உருவாகியுள்ளது.  இப்படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகாமல் நேரடியாக OTT தளத்தில் ரிலீஸ் ஆகப்போவதாக தகவல்கள் வெளியானதையடுத்து, இப்படத்தின் OTT  உரிமையை அமேசான் ப்ரைம் வீடியோ வாங்கியதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.  இப்படத்தின் போஸ்டர்கள் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.  இப்படம் பிப்ரவரி மாதம் வெளியாகப்போகும் என்று கூறப்பட்ட நிலையில் ஏப்ரல் மாதம் வெளியாகப்போவதாக படக்குழு அறிவித்தது.

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'பீஸ்ட்' படம் ஏப்ரல் மாதம் வெளியாகப்போவதாக அறிவிப்பு வெளியான  நிலையில், இப்படமும் ஏப்ரல் மாதம் வெளியாகபோகிறது என்கிற அறிவிப்பால் பீஸ்ட் படத்திற்கு போட்டியாக இப்படம் அமையும் என்று கூறப்பட்டது.  இந்நிலையில் இப்படம் மார்ச் முதல் வாரம் அல்லது இரண்டாவது வாரத்தில்  அமேசான் ப்ரைம் வீடியோ OTT தளத்தில் வெளியாகபோவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.  ஏற்கனவே கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான பென்குயின் மற்றும் மிஸ் இந்தியா ஆகிய இரண்டு படங்கள் OTT-ல் வெளியான நிலையில் இப்படம் OTT-ல் வெளியாகப்போகிறது.  

கடந்த சில தினங்களுக்கு முன்னர் OTT-ல் வெளியான விக்ரமின் 'மகான்' படம் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வெற்றியடைந்த நிலையில் இப்படமும் வெற்றி பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | 'சாணிக்காயிதம்' படத்தின் OTT உரிமையை வாங்கிய பிரபல நிறுவனம்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News