ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள பொன் மகள் வந்தாள் திரைப்படத்தின் வா செல்லம் பாடல்...

நடிகை ஜோதிகா நடிப்பில் உருவாகி வரும் பொன் மகள் வந்தாள் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘வா செல்லம்’ பாடலின் லிரிக்கெட் வீடியோவினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Last Updated : Mar 3, 2020, 07:22 PM IST
ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள பொன் மகள் வந்தாள் திரைப்படத்தின் வா செல்லம் பாடல்... title=

நடிகை ஜோதிகா நடிப்பில் உருவாகி வரும் பொன் மகள் வந்தாள் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘வா செல்லம்’ பாடலின் லிரிக்கெட் வீடியோவினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

நடிகர் சூர்யாவின் 2D எண்டெர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் பொன் மகள் வந்தாள். நடிகை ஜோதிகா நாயகியாக நடிக்கும் இத்திரைப்படத்தினை JJ பெர்டிக் இயக்குகிறார். இந்த திரைப்படத்தில் நடிகர் பார்த்திபன், பாக்யராஜ், பிரதாப் போத்தன் உள்ளிட்டோர் பலர் முக்கிய வேடம் ஏற்றுள்ளனர்.

கடந்தாண்டை பெறுத்தவரையில் நடிகை ஜோதிகா ராட்சசி, ஜாக்பாட், தம்பி என மூன்று திரைப்படங்களில் நடித்தார். எனினும் அவருக்கு உரிய அங்கிகாரத்தினை இத்திரைப்படங்கள் வழங்கவில்லை என்றே கூறப்படுகிறது. இறுதியாக அவர் நடித்த காற்றிமொழி திரைப்படத்தில் அவருக்கு கிடைத்த அங்கிகாரம், அடுத்து வந்த திரைப்படங்களில் அவருக்கு கிடைக்க வில்லை என்றே கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது அவர் விட்ட இடத்தை பிடிக்க ஏதுவாக பொன் மகள் வந்தாள் திரைப்படம் அமையும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக இத்திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டரினை படக்குழுவினர் நேற்றைய தினம் வெளியிட்டனர். இந்த போஸ்டரில் நடிகை ஜோகிகா வழக்கறிஞர் வேடத்தில் காட்சியளித்தார். இதன் மூலம் இத்திரைப்படத்தில் ஜோதிகா வழக்கறிஞராக நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை தான் ஏற்காத கதாப்பாத்திரத்தில் ஜோதிகா நடித்து வரும் நிலையில் இந்த திரைப்படம் அவருக்கு உரிய அங்கிகாரத்தை அளிக்கும் என நம்பப்படுகிறது.

இந்நிலையில் தற்போது இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘வா செல்லம்’ என்னும் பாடலினை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். இப்பாடலின் வரிகளை பாடல் ஆசிரியர் விவேகா எழுதியுள்ளார். பாடகி பிரிந்தா சிவக்குமார் பாடியுள்ளார். இனிமையான குரலில் வெளியாகியுள்ள இப்பாடல் தாய்மார்களின் தாலாட்டு பாடல்களில் ஒன்றாக இடம்பெறும் என்பதில் எந்ந ஐயமும் இல்லை.

Trending News