மதுரையில் மாஸ் காட்டும் வலிமை; இத்தனை திரையரங்குகளில் ரிலீஸா

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள Ritz Banu Cinemas தியேட்டர் வலிமை ரிலீஸ் ஆவதை முன்கூட்டியே உறுதி செய்துள்ளது.

Written by - ZEE Bureau | Last Updated : Nov 29, 2021, 12:43 PM IST
மதுரையில் மாஸ் காட்டும் வலிமை; இத்தனை திரையரங்குகளில் ரிலீஸா

Valimai release update: H.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் உருவாகி அஜித் ரசிகர்களை மட்டுமல்லாது, மற்ற ரசிகர்களையும் அதிகபட்ச எதிர்பார்ப்பில் ஆழ்த்திய தமிழ் படம் தான் 'வலிமை'. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதில் ஹுமா குரேஷி, யோகி பாபு, கார்த்திகேயா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் அப்டேட்டை எதிர்பார்த்து பலரும் படக்குழுவினரை வசைபாடி வந்தனர். அதனையடுத்து படத்தின் போஸ்டர்கள், பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் ஆதங்கத்தை சற்று அமைதிப்படுத்தியது. இந்திய அளவில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள படம் என்றால் சந்தேகமே இல்லாமல் அது அஜித் (Ajith Kumar) நடித்துள்ள வலிமை (Valimai) படம் தான்.

ALSO READ | வலிமை படத்தின் மற்றொரு போஸ்டர் வெளியாகிறது; படக்குழு கூறுவது என்ன

இதற்கிடையில் சமீபத்தில் இந்த படம் 2022 ஆம் ஆண்டு பொங்கலுக்கு அதாவது ஜனவரி 12 ம் தேதி திரைக்கு வருவதாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து படக்குழு வலிமை படத்தின் போஸ்டர்களையும், முதல் சிங்கிள் பாடலையும் வெளியிட்டு படத்தின் பிரமோஷனை ஆரம்பித்துள்ளன்ர். அதன்படி வலிமை படத்தின் மோஷன் போஸ்டருக்கு மட்டும் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மிகப்பெரிய சாதனை படைத்தது. அதேபோல் நாங்க வேற மாரி பாடல் தற்போது 35 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது. படம் பற்றிய அடுத்த அப்டேட்டான அடுத்த சிங்கிள், டிரெய்லர்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். 

இந்த நிலையில் பல படங்களின் ரிலீஸ் தேதி கடைசி நேரத்தில் கூட மாற்றப்படுகிறது என்றாலும் மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள Ritz Banu Cinemas தியேட்டர், பொங்கலுக்கு தங்களின் தியேட்டரில் வலிமை ரிலீஸ் ஆவதை முன்கூட்டியே உறுதி செய்துள்ளது.

 

 

அதனைத்தொடர்ந்து மதுரை அரசரடி SDC சோலமலை தியேட்டரும், அனுப்பானடி பழனி ஆறுமுகா தியேட்டரும் தல அஜித்தின் 'வலிமை' படத்தை திரையிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அதே போல் ராமநாதபுரம் நகரில் D சினிமாஸ், ஜெகன் திரையரங்கமும் தல அஜித்தின் 'வலிமை' படத்தை திரையிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

 

 

ALSO READ | Valimai Update: ஐதராபாத்தில் மீண்டும் வலிமை படப்பிடிப்பு தொடங்கியது

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

More Stories

Trending News