நாளை 'வேலைக்காரன்' ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!

Last Updated : Aug 27, 2017, 01:39 PM IST
நாளை 'வேலைக்காரன்' ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு! title=

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்துள்ள வேலைக்காரன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் நாளை வெளியாக உள்ளது.

24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் `வேலைக்காரன்'. மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன, நயன்தாரா இணைந்திருக்கும் இப்படம் வருகிற செப்டம்பர் 29-ம் தேதி வெளியாகிறது.

இந்த படத்தில் மலையாள நடிகர் பகத் பாஷில் வில்லனாக நடித்திருக்கிறார். பிரகாஷ் ராஜ், சினேகா, ரோகினி, ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சதீஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

ஏற்கனவே படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்நிலையில், அனிருத் இசையில் படத்தில் இருந்து சிங்கிள் டிராக் ஒன்று நாளை மாலை 6 மணிக்கு வெளியாகிறது. அந்த சிங்கிள் டிராக்கின் புரோமோ நேற்று மாலை 6 மணிக்கு வெளியானது.

Trending News