வெண்ணிலா கபடி குழு புகழ் ஹரி வைரவன் காலமானார்!

வெண்ணிலா கபடி குழு புகழ் ஹரி வைரவன் உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் காலமானார்   

Written by - RK Spark | Last Updated : Dec 3, 2022, 09:01 AM IST
வெண்ணிலா கபடி குழு புகழ் ஹரி வைரவன் காலமானார்!

‘வெண்ணிலா கபடி குழு’ ’குள்ளநரி கூட்டம்’ ’நான் மகான் அல்ல’ உள்ளிட்ட சில படங்களில் துணை நடிகராக நடித்தவர் நடிகர் ஹரி வைரவன். இவர் ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தில் சூரியுடன் சேர்ந்து காமெடி வேடத்தில் நடித்து இருந்தார் என்பதும் குறிப்பாக புரோட்டா கடை காட்சியில் இவரது நடிப்பு அனைவரையும் கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ஹரி வைரவன் நேற்று இரவு 12 மணிக்கு உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 

மேலும் படிக்க | லோகேஷ் கனகராஜா, விக்ரமா... மாதவன் எடுத்திருக்கும் முடிவு... உண்மை என்ன?

இதுகுறித்து அவரது நெருங்கிய நண்பர்களில் ஒருவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கூறியபோது, ‘வெண்ணிலா கபடிகுழு’ திரைப்படத்தில் நடித்த நடிகர்கள் ஹரி வைரவன் இறைவனடி சேர்ந்தார்/ அவருடைய ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.  மதுரையை சேர்ந்த ஹரி வைரவன் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த பல மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார். அவர் தனது வாழ்வாதாரத்தை இழந்து குடும்பத்துடன் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் திரையுலகினர் பலர் அவருக்கு நிதி உதவி செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக உடல்நிலை மீண்டுவந்த ஹரி வைரவன் திடீரென மரணம் அடைந்து அனைவரையும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஹரி வைரவன் இறுதிச் சடங்குகள் இன்று மதுரையில் நடைபெறும் என்றும் இதில் நடிகர் நடிகைகள் நேரில் சென்று அஞ்சலி செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

vkk

மேலும் படிக்க | வந்துட்டாருய்யா வந்துட்டாரு - பட்டையை கிளப்பும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் ட்ரெய்லர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

More Stories

Trending News