திருமண நிச்சயதார்த்தத்தை அதிகாரபூர்வமாக அறிவித்த பிரபல நடிகர்

தாஜ்மஹால் பின்னணியில் நடந்த இந்த திருமண நிச்சயதார்த்தத்தில் நெருங்கிய நண்பர்கள் உறவினர்கள் கலந்து கொண்டனர். 

Written by - ZEE Bureau | Last Updated : Sep 13, 2021, 04:06 PM IST
திருமண நிச்சயதார்த்தத்தை அதிகாரபூர்வமாக அறிவித்த பிரபல நடிகர்

தளபதி விஜய் நடித்த துப்பாக்கி, சூர்யா நடித்த அஞ்சான் உள்பட தமிழ் திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் வித்யூத் ஜமால். கடந்த சில ஆண்டுகளாக நடிகர் வித்யூத் ஜமால் பேஷன் டிசைனர் நந்திதா என்பவரை காதலித்து வந்ததாக செய்திகள் வெளியானது. ஆனால் இதற்கிடையில் சமீபத்தில் இவர்களது திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாகவும் செய்திகள் வெளியானாது.

இந்த நிச்சயதார்த்தம் தாஜ்மஹால் பின்னணியில் நடைபெற்று. இந்த திருமண நிச்சயதார்த்தத்தில் நெருங்கிய நண்பர்கள் உறவினர்கள் கலந்து கொண்டதாகவும் விரைவில் திருமண தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் வித்யூத் ஜமால் தனது சமூக வலைதளப் பக்கத்தில் திருமண நிச்சயதார்த்த தகவலை உறுதி செய்துள்ளார். அதன்படி இந்த திருமண நிச்சயதார்த்தம் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி தாஜ்மஹால் பின்னணியில் நடந்தது என்று கூறி அதுகுறித்த புகைப்படங்களையும் அவர் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

இதற்கிடையில் விரைவில் திருமண தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More Stories

Trending News