இளையராஜா வைத்த ஆப்பு; அவதியில் படக்குழுவினர்

இந்த படத்திற்கு இளையராஜா தான் முதலில் இசையமைத்தார். அவரது இசையில் தான் சர்வதேச பட விழாக்களுக்கு படம் அனுப்பப்பட்டு பாராட்டும் பெற்றது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 1, 2021, 12:29 PM IST
இளையராஜா வைத்த ஆப்பு; அவதியில் படக்குழுவினர் title=

காக்கா முட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை போன்ற ஹிட் படங்களை இயக்கிய மணிகண்டன். இவரது இயக்கத்தில் தற்போது நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் கடைசி விவசாயி. இந்த படத்திற்கு கலை இயக்குனர் தொட்டா தரணி. ட்ரைபல் ஆர்ட்ஸ் சமீர் பரத் ராமுடன் இணைந்து நடிகர் விஜய்சேதுபதி (Vijay Sethupathi) தயாரித்துள்ளார். இந்த படத்தில் நல்லாண்டி, விஜய் சேதுபதி, யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர்.

கடைசி விவசாயி (Kadaisi Vivasayi) படத்திற்கு இளையராஜா தான் முதலில் இசையமைத்தார். அவரது இசையில் தான் சர்வதேச பட விழாக்களுக்கு படம் அனுப்பப்பட்டு பாராட்டும் பெற்றது. அதன் பிறகு, படக்குழுவினருக்கும், இளையராஜா தரப்புக்கும் நெருடல் உருவான காரணத்தால் இந்த படத்தில் இருந்து இளையராஜா (Ilaiyaraaja) இசையை நீக்கிவிட்டு, சந்தோஷ் நாராயணன் இசையை கோர்த்து படத்தை தயாரித்தனர். 

ALSO READ | விஜய் சேதுபதி படத்தில் கௌதம் மேனன் வில்லன்

இது தொடர்பாக தகவல் அறிந்த இளையராஜா, தன்னுடைய எந்த படத்திற்கும் இந்த மாதிரி ஆனதில்லை எனவும், தன்னுடைய அனுமதி இன்றி இந்த சம்பவம் நடத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்து இசையமைப்பாளர் சங்கத்தில் படக்குழுவினர் மீது புகார் அளித்துள்ளார். 

இந்த நிலையில் தர்ப்து இந்த விவரகாரம் தொடபாக இசையமைப்பாளர் சங்கத்தின் மூலம் படக்குழுவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ | இதற்காகத்தான் விஜய்சேதுபதியை தாக்கினேன்! உண்மையை உடைத்த காந்தி!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News