22 ஆண்டுகளுக்குப்பிறகு ரீ ரிலீஸாகும் விஜய் - சிம்ரன் திரைப்படம்!

விஜய் - சிம்ரன் நடித்த துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படம் வெளிவந்து 22 ஆண்டுகள் ஆன நிலையில், இப்படத்தை கேரள ரசிகர்கள் வரும் 19 ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்வதாக அறிவித்துள்ளனர்

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 17, 2021, 10:46 AM IST
22 ஆண்டுகளுக்குப்பிறகு ரீ ரிலீஸாகும் விஜய் - சிம்ரன் திரைப்படம்!  title=

இளையதளபதி விஜய் மற்றும் சிம்ரன் நடிப்பில் 22 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படம் ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இயக்குநராக அறிமுகமான எழிலுக்கு இது முதல் படம். விஜய்க்கு 21வது படம். இந்த திரைப்படம் விஜய்க்கு மட்டுமில்லாது, தமிழ் சினிமாவின் பெஸ்ட் காதல் திரைப்படங்கள் வரிசையிலும் இடம்பிடித்தது. லீட் ரோலில் நடித்த விஜய், சிம்ரனுக்கு தமிழக அரசின் விருதுகள் கிடைத்தது.

ALSO READ | காவலர்களின் வலியை பதிவு செய்ய காத்திருக்கும் ”ரைட்டர்”! 

தமிழில் கிடைத்த மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து 5 மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. குறிப்பாக, கேரளாவில் ரசிகர்கள் இப்படத்தைக் கொண்டாடினர். அங்கு அவருக்கு தனி மார்க்கெட்டை ஏற்படுத்திக் கொடுத்த படமாகவும் இது மாறியது. இந்தப் படத்தில் இடம்பெற்றிருக்கும் கசிந்துருகும் காதலைக் கொண்ட ‘மேகமாய் வந்து போகிறேன் வெண்ணிலா உன்னைத் தேடினேன்..’  ’இன்னிசை பாடி வரும்’ என்னும் பாடல்கள் இன்றும் பேவரெட் பாடலாக பலருக்கும் இருக்கிறது. 

தமிழகத்தில் பல இடங்களில் நூறு நாட்களைக் கடந்து ஓடிய துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படம், கேரளாவில் 125 நாளுக்கும் மேலாக ஓடி அசத்தியது. இந்நிலையில், கேரளாவைச் சேர்ந்த விஜய்யின் தீவிர ரசிகர்கள், துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படத்தை மீண்டும் ரீ ரிலீஸ் செய்ய முடிவெடுத்துள்ளனர். படம் வெளிவந்து 22 ஆண்டுகள் ஆனாலும், இப்போதைய டிரெண்டுக்கும் ஏற்ற காதல் படமாக இருப்பதால், டிசம்பர் 19 ஆம் தேதி இப்படத்தை கேரளாவில் ரீ ரிலீஸ் செய்கின்றனர். திருவனந்தபுரத்தில் உள்ள கலாபவன் தியேட்டரில் மாலை 7 மணிக்கு ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது. இதனை, நடிகை சிம்ரன் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனால், விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

ALSO READ |  மறுபிறவியை மையமாக கொண்டுள்ள தமிழ் திரைப்படம் ஷியாம் சிங்கா ராய் டிரெய்லர் வெளியீடு,

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR 

Trending News