மும்பையில் ஸ்கூட்டரில் ஜாலியாக ரைட் போன விராட் - அனுஷ்கா சர்மா: video

பாலிவுட் நடிகையான அனுஷ்கா சர்மா, கணவர் விராட் கோலியுடன் மும்பையில் ஜாலியாக ஸ்கூட்டரில் ரைடு போன வீடியோ வெளியாகியுள்ளது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 21, 2022, 01:40 PM IST
  • விராட் - அனுஷ்கா சர்மா ஜாலி ரைட்
  • மும்பை நகரை ஸ்கூட்டரில் சுற்றினர்
  • இன்ஸ்டாகிராமில் வைரலாகும் வீடியோ
மும்பையில் ஸ்கூட்டரில் ஜாலியாக ரைட் போன விராட் - அனுஷ்கா சர்மா: video title=

பிரபலமாக இருந்தாலும், ஜாலியாக ஊர் சுற்ற வேண்டும், சாலையோர கடைகளில் உணவருந்த வேண்டும் என்ற ஆசையெல்லாம் இருக்கத் தான் செய்யும். ரசிகர்கள் கூடிவிட்டால் அது பிரச்சனையாகிவிடும் என்பதற்காகவே அப்படியான தங்களின் ஆசைகளில் செய்யாமல் இருக்கும் பிரபலங்களுக்கு மத்தியில், விராட் கோலியும் - அனுஷ்கா சர்மாவும் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறார்கள். தங்களுக்கு என்னவெல்லாம் ஆசையாக இருக்கிறதோ, அதனை ஏதாவது ஒரு விதத்தில் செய்துவிட வேண்டும் என்பது தான் அவர்களின் இலக்கு. இருவருக்கும் ஜோடியாக ஒரு ஸ்கூட்டரில் மும்பை நகரத்தில் வலம் வர வேண்டும் என்று ஆசையாம். வேலை மற்றும் விராட் கோலியின் அடுத்தடுத்த மேட்சுகள் காரணமாக அப்படியான ரைடு அவர்களால் போக முடியவில்லை.

மேலும் படிக்க | ஜிம்பாப்வே பவுலர் குடும்பத்துக்கு சர்பிரைஸ் கொடுத்த இந்திய பவுலர்

இப்போது வீட்டில் இருக்கும் விராட் கோலி ஆசியக்கோப்பைக்காக தயார் செய்து கொண்டிருக்கிறார். மனைவி அனுஷ்கா சர்மாவுடன் போதுமான நேரத்தை செலவிடும் அவர், மனைவியை கூட்டிக் கொண்டு திடீரென ஸ்கூட்டரில் ஜாலி ரைட் சென்றுள்ளார். மும்பையில் முக்கியமான நகரப் பகுதிகளில் வலம் வந்த இருவரும் முன்னெச்சரிக்கையாக ஹெல்மெட் அணிந்து கொண்டனர். அவர்களை யாரும் அடையாளம் காணமாட்டர்கள் என நினைத்திருந்தபோதும், ரசிகர்கள் அடையாளம் கண்டு வீடியோவும் எடுத்துவிட்டனர். 

இந்த வீடியோ இப்போது இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டு பலரும் அதனை லைக் செய்துள்ளனர். ஒரு செலிபிரிட்டியாக இருப்பது எவ்வளவு பிரச்சனை என்பதையும் உணர்ந்து கொள்ள முடிவதாக ரசிகர்கள் கமெண்ட் அடித்துள்ளனர். நினைத்த இடத்துக்கு நினைத்த நேரத்தில் செல்ல முடியாது. ஆசைப்பட்ட இடத்தில் இறங்கி சாப்பிட முடியாது. ஒரு ஹோட்டலுக்கு அல்லது சினிமா தியேட்டருக்கு கூட செல்ல முடியாத அவர்களின் நிலையும் கொஞ்சம் கஷ்டம் தான் என ஒரு ரசிகர் கமெண்டில் பதிவு செய்ய, பலரும் வீடியோவுடன் சேர்த்து இந்த கமெண்டுக்கு லைக் போட்டுள்ளனர்.  

மேலும் படிக்க | ஆசியக்கோப்பை 2022; இந்தியா - பாகிஸ்தான் இதுவரை சந்திக்காத ஒரு மேட்ச்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News