சங்கத்தமிழன் திரைப்படத்தின் ‘அழகு அழகு’ பாடல் வெளியானது!

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் சங்கத்தமிழன் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள அழகு அழகு பாடலின் லிரிக்கல் வீடியோவினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!

Last Updated : Sep 17, 2019, 09:26 PM IST
சங்கத்தமிழன் திரைப்படத்தின் ‘அழகு அழகு’ பாடல் வெளியானது! title=

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் சங்கத்தமிழன் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள அழகு அழகு பாடலின் லிரிக்கல் வீடியோவினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!

'வாலு', 'ஸ்கெட்ச்' திரைப்படங்களை இயக்கிய விஜய்சந்தர் இயக்கத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடித்து வரும் திரைப்படம் சங்கத்தமிழன். இந்த படத்தை விஜயா பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக ராசி கண்ணா மற்றும் நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளனர். இவர்களுடன் நாசர், சூரி, ஆசுதோஷ் ராணா, ரவி கிஷன், மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து, ஜான் விஜய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  
 
சமீப நாட்களாக தீவிரமாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்ததை அடுத்து தற்போது இப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. படத்தின் டீசர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில் தற்போது இப்படத்தில் இடம்பெற்றள்ள அழகு அழக என்னும் பாடலின் லிரிக்கல் வீடியோவினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 

விவேக்-மெர்வின் இசையில் ஸ்வேதா மோகன் குரலில் வெளியாகியுள்ள இப்பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. முன்னதாக  இப்படத்தில் இடம்பெறும்  "சண்டக்காரி நீதான்" என்ற மெலோடி பாடல் வீடியோ வெளியாகி காதலர்கள் வாட்ஸ்அப் ஸ்டேடஸாக மாறியது குறிப்பிடத்தக்கது.
 
விவேக்-மெர்வின் இசையில் அனிருத் பாடியுள்ள இப்பாடல் ரசிகர்களின் மனதை வெகுவாக ஈர்த்துள்ளது. மென்மையான இசையில் விஜய் சேதுபதி, நிவேதா பெத்துராஜின் அழகிய  ரொமான்ஸ் காட்சிகளில் காதலர்களின் கண்களுக்கு இதமாக அமைந்துள்ளது. 

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படம் வரும் அக்டோபர்  மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.  

Trending News