Watch: அக்கரையிலும் அக்கறை மாறாமல் Anushka-வை கவனிக்கும் Virat, வைரலாகும் video!!

மைதானத்திலிருந்து சைகை காட்டி ஆக்ஷனில் விராட், அனுஷ்கா சாப்பிட்டாரா என கேட்க, அதற்கு அனுஷ்கா ஸ்டாண்டிலிருந்து கட்டைவிரலை உயர்த்தி தம்ப்ஸ் அப் செய்து சாப்பிட்டு விட்டதாக பதிலளித்தார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 29, 2020, 03:42 PM IST
  • வைரலாகும் விராட் மற்றும் அனுஷ்காவின் க்யூட் வீடியோ.
  • அனுஷ்கா மீது விராட் காட்டும் அக்கறையை புகழும் ரசிகர்கள்.
  • IPL 2020-ன் ஒரு போட்டியில் நடந்தது சைகை சம்பாஷணை.
Watch: அக்கரையிலும் அக்கறை மாறாமல் Anushka-வை கவனிக்கும் Virat, வைரலாகும் video!! title=

கணவன் மனைவிக்கு இடையில் அன்பும் பாசமும் அக்கறையும் இருந்தால் அது அவர்களது முகத்தில் பிரதிபலிக்கும், செய்கைகளில் தெரியும் என்று கூறுவார்கள். அப்படிப்பட்ட பாசமிகு ஒரு கணவரையும் அன்பான மனைவியையும் சமீபத்தில் பலர் கண்டனர். கிரிக்கெட் வீரர் விராட் கோலியும் (Virat Kohli) பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவும் தான் இவர்கள்.

இவர்களது க்யூட்டான ஒரு செய்கையின் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. IPL 2020 UAE-ல் நடந்து வருகிறது. இதில் நடந்த ஒரு போட்டியின் போது, விராட்டும் அனுஷ்காவும் பேசிக்கொண்டனர். இதில் என்ன அதிசயம் என்கிறீர்களா? இருவரும் பேசிக்கொண்ட போது, விராட் மைதானத்திலும், அனுஷ்கா ஸ்டாண்ட்சிலும் இருந்தனர். சைகை மொழியில் இவர்களை பேசிக்கொண்டது ரசிகர்களின் மனதை கொள்ளைக்கொண்டுள்ளது.

எதைப் பற்றி பேசினார்களோ அது இன்னும் சுவாரசியமான விஷயம். ஆம்!! அனுஷ்கா சர்மா இப்போது கருவுற்றிருக்கிறார். இந்த நிலையில், மைதானத்திலிருந்து சைகை காட்டி ஆக்ஷனில் விராட், அனுஷ்கா சாப்பிட்டாரா என கேட்க, அதற்கு அனுஷ்கா ஸ்டாண்டிலிருந்து கட்டைவிரலை உயர்த்தி தம்ப்ஸ் அப் செய்து சாப்பிட்டு விட்டதாக பதிலளித்தார்.

அந்த க்யூட்டான வீடியோவை இங்கே காணலாம்:

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

Couple Goals Follow @music__and__masthi  #Followusformore . . .  For more videos of #TollyWood #BollyWood #VideoSongs #Musically #Dance #DanceVideos @instatrendsoffl #deepthishannu#combination #love #shekarmaster #naveenkumarreddy1#viral#tiktok#telugulovesongs#telugulovefailurewhatsappstatus#telugulovers #telugulovesongs #telugudubssmash #viratkohli #virushka #anushkasharma #iccworldcup2019 DISCLAIMER ‌This photo, video or Audio is not owned by ourselves ‌The copyright credit goes to respective owners ‌This video is not used for illegal sharing or profit Making ‌This video is purely Fan made ‌If any problem Message us on Instagram and the video will be removed ‌No need to report or send strike ‌Credit/Removal:-@music__and__masthi

A post shared by MUSIC & MASTHI (@music__and__masthi) on

ஞாயிற்றுக்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்கு எதிரான ஆட்டத்தில் விராட் மற்றும் அவரது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணியை அனுஷ்கா உற்சாகப்படுத்தினார்.

சமீபத்தில், விராட் கோஹ்லி மற்றும் அனுஷ்கா ஷர்மா (Anushka Sharma) கடலில் உல்லாசமாக இருப்பதைப் போன்ற ஒரு அழகான படத்தை விராட் கோலி தனது அகௌண்டில் பகிர்ந்தார்.

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

pic credit - @abdevilliers17 

A post shared by Virat Kohli (@virat.kohli) on

விராட் மற்றும் அனுஷ்கா ஆகியோர் தங்கள் முதல் குழந்தையை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். 2021 ஜனவரியில் குழந்தை பிறக்கும் என கூறப்பட்டுள்ளது.

ALSO READ: Happy birthday Irfan Pathan என்று பிறந்த நாள் வாழ்த்து சொல்லும் சச்சின் டெண்டுல்கர்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News