பிரபல நடிகர் திடீர் மரணம், அதிர்ச்சியில் ஆழ்ந்த ரசிகர்கள்!

டிஸ்னி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து உலகப்புகழ் பெற்ற இளம் நடிகர் தூக்கத்தில் இருந்த பேதே இறந்த சம்பவம்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!

Last Updated : Jul 8, 2019, 05:24 PM IST
பிரபல நடிகர் திடீர் மரணம், அதிர்ச்சியில் ஆழ்ந்த ரசிகர்கள்!

டிஸ்னி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து உலகப்புகழ் பெற்ற இளம் நடிகர் தூக்கத்தில் இருந்த பேதே இறந்த சம்பவம்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!
 
அமெரிக்காவை சேர்ந்த பிரபல நடனக்கலைஞர், நடிகர், பாடகர் என பன்முகத் தன்மை கொண்டவர் கேமரூன் பாய்சி. டிஸ்னி தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன் மூலம் அமெரிக்கா மட்டுமின்றி உலகம் முழுவதும் அனைவராலும் அறியப்பட்டவர்.
 
20 வயது நடிகராக, குழந்தைகளைக் கவர்ந்த நடிகராக வலம் வந்த கேமரூன், சமீபத்தில் மூளையில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று தூக்கத்திலேயே அவரது உயிர் பிரிந்ததாக அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இவர் ‘மிரர்', ‘ஈகல் ஐ', ‘கிரோம் அப்', ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். ‘தி லெஜன் ஆஃப் எக்ஸ்ராட்ணரி டான்சர்' வெப் சீரியஸில் நடித்திருக்கிறார்.
 
ட்விட்டரில் தற்போது வரை 13 மில்லியனுக்கும் அதிகமானோர் பின் தொடரும் கேம்ரூன் பாய்சி இளம் வயதிலேயே மரணமடைந்த செய்தி அவரது ரசிகர்கள் அனைவரையும் அதிர்ச்சியும், வேதனையும் அடையச்செய்துள்ளது.

More Stories

Trending News