பரணி அடித்த பல்டி! சஸ்பெண்ட் செய்யப்பட்ட முத்துப்பாண்டி..அண்ணா சீரியல் அப்டேட்..

Anna Serial Update : சஸ்பெண்ட் செய்யப்பட்ட முத்துப்பாண்டி.. பரணி கொடுத்த ட்விஸ்ட் என்ன? அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்   

Written by - Yuvashree | Last Updated : Jun 5, 2024, 01:53 PM IST
  • அண்ணா தொடரில் ட்விஸ்ட்
  • இன்று நடக்க இருப்பது என்ன?
  • இன்றைய அப்டேட் இதோ!
பரணி அடித்த பல்டி! சஸ்பெண்ட் செய்யப்பட்ட முத்துப்பாண்டி..அண்ணா சீரியல் அப்டேட்.. title=

Anna Serial Update : தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சண்முகத்தை என்கவுண்டரில் போட்டு தள்ள பிளான் போட முப்பிடாதி மூலமாக பரணிக்கு விஷயம் தெரிய வந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது, ஷண்முகம் ஸ்டேஷனலில் வயிறு வலியில் துடிப்பது போல் ட்ராமா போட்டு பொருட்களை தூக்கி போட்டு உடைக்க முத்துப்பாண்டி சாப்பிட என்னடா குடுத்தீங்க என்று கோபப்பட கான்ஸ்டபிள் உங்களுக்கு கொடுத்த டீ தான் கொடுத்தோம் என்று சொல்கின்றனர். 

Anna Serial

அதன் பிறகு சண்முகத்தை ஹாஸ்பிடலுக்கு அழைத்து செல்ல வெளியே கூட்டி வர DSP வந்து இறங்கி ஷாக் கொடுக்கிறார், எதுக்கு கைது பண்ணீங்க? எங்க கூட்டிட்டு போறீங்க என்று கேள்வி மேல் கேள்வி கேட்க முத்துப்பாண்டி குடிநீரில் விஷத்தை கலந்ததுக்காக கைது செய்ததாக சொல்லல் ஆதாரம் இருக்கா என்று கேட்க முத்துப்பாண்டி இல்லை என்று சொல்கிறான். பிறகு எதுக்கு விலங்கு மாட்டி இருக்கு, கழட்டு என்று கழட்ட சொல்கிறான்.

மேலும் படிக்க | கார்த்திகை தீபம்: ஜூஸில் கலக்கப்பட்டது என்ன? கார்த்திக்கு தெரிய வரும் உண்மை

அடுத்து எங்க கூட்டிட்டு போற என்று கேள்வி கேட்க நடுவரிடம் ஒப்படைக்க செல்வதாக சொல்ல ஜட்ஸ் பெயரை கேட்க முத்துப்பாண்டி ஓரி பெயரை சொல்ல அவர் ரிட்டையர் ஆகி ஒரு வருஷம் ஆகுது என்று DSP முத்துபாண்டிக்கு ரைடு விடுகிறார். பிறகு பரணி சிசிடிவி ஆதாரத்தை காட்டி சண்முகத்தின் மீது தவறு இல்லை என்று நிரூபிக்க முத்துப்பாண்டி சஸ்பெண்ட் செய்து சண்முகத்தை விடுவிக்கிறார் DSP. 

Anna

பிறகு ரிலீசான ஷண்முகம் முத்துபாண்டியை கிண்டல் அடித்து விட்டு அங்கிருந்து கிளம்புகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க | நினைத்தேன் வந்தாய் அப்டேட்: சவால் விடும் சுடர்.. கூட்டு சேர்ந்து இந்து, மனோகரி போடும் திட்டம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News