ஜானகிக்கு அதிர்ச்சி கொடுத்த ரகுராம்-சந்தியா ராகம் எபிசோட் அப்டேட்!

தனக்கு தானே தண்டனை.. ஜானகிக்கு அதிர்ச்சி கொடுத்த ரகுராம் - சந்தியா ராகம் இன்றைய எபிசோட் அப்டேட்   

Written by - Yuvashree | Last Updated : May 10, 2024, 04:09 PM IST
  • சந்தியா ராகம் எபிசோட் அப்டேட்
  • இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது
  • இன்றைய எபிசோடில் நடக்கவிருப்பது என்ன?
ஜானகிக்கு அதிர்ச்சி கொடுத்த ரகுராம்-சந்தியா ராகம் எபிசோட் அப்டேட்! title=

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சந்தியா ராகம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ரகுராம் ஜானகியிடம் பேசாமல் அவளுக்கு அதிர்ச்சி கொடுத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது கோச் கார்த்திக் தனத்திற்கு போன் செய்ய அவள் யாருக்கும் தெரியாமல் பாத்ரூமுக்குள் சென்று மகிழ்ச்சியுடன் பேசுகிறாள். அப்பா தன்னை ஏற்று கொண்டதை பற்றி மகிழ்ச்சியுடன் சொல்ல கார்த்திக் உங்கப்பா என்னை தப்பா புரிஞ்சிட்டு இருக்காரு என்று சொல்கிறான். 

முதல் முறையாக கார்த்திக் தனத்திடம் பேசி கொண்டே இருக்க ஆசைப்பட தனம் அதை புரிந்து கொண்டு போனை கட் பண்ணி சந்தோசப்பட்டு கொள்கிறாள். அதன் பிறகு ஜானகி ரூமில் ரகுராமிடம் பேச போக அவர் இனிமே நாம ரெண்டு பேரும் பேசிக்க வேண்டாம். இது உனக்கு நான் கொடுக்கிற தண்டனை இல்ல, எனக்கு நானே கொடுத்துகிற தண்டனை என்று சொல்லி பாய் தலகானியுடன் வெளியே சென்று படுக்க அதை பார்த்து வில்லிகள் டீம் சந்தோசப்படுகின்றனர். 

Sandhya Raagam

மேலும் படிக்க | இந்த வாரம் ஜீ தமிழில் ரசிகர்களால் விரும்பி பார்க்கப்பட்ட டாப் 5 சீரியல்கள் - ரேட்டிங் எவ்வளவு? இதோ விவரம்

மாயாவும் தனமும் சோகத்தில் இருக்கும் ஜானகிக்கு ஆறுதல் சொல்கின்றனர். அடுத்ததாக மறுநாள் காலையில் ஜானகி எல்லா நாளும் போல் சமைக்க கிச்சனுக்குள் நுழைய அங்கு வந்த பார்வதியும் ஷாருவும் ரகுராம் உங்க மேல ரொம்ப கோபமா இருக்காரு.

அப்படி இருக்கும் போது நீங்க சமைச்சா அவர் சாப்பிடுவாரா என்று கேட்டு ஷாக் கொடுக்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சந்தியா ராகம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க | இதயம் அப்டேட்: பாரதியின் மொத்த குடும்பத்துக்கும் ஷாக் சர்ப்ரைஸ் கொடுத்த ஆதி.. என்ன நடந்தது?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News