வில்லிகளின் சதியால் உயிரிழக்கும் பொம்மி.. எதிர்பாராத திருப்பங்களுடன் நினைத்தாலே இனிக்கும் சீரியல்

Ninaithale Inikkum Zee Tamil: பரபரப்பான திருப்பங்களுடன் நினைத்தாலே இனிக்கும் டிவி சீரியல் கதைக்களம் உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Shiva Murugesan | Last Updated : May 9, 2023, 11:23 AM IST
  • குளத்தில் தண்ணீர் எடுக்க போன பொம்மி.. தண்ணீரில் முக்கி கொல்ல முயற்சி.
  • வில்லிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து கொடூரமாக கொன்று விடுகின்றனர்.
  • நினைத்தாலே இனிக்கும் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
வில்லிகளின் சதியால் உயிரிழக்கும் பொம்மி.. எதிர்பாராத திருப்பங்களுடன் நினைத்தாலே இனிக்கும் சீரியல் title=

Today Tamil Serial: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தாலே இனிக்கும். 

இன்றைய எபிசோட்:
இந்த சீரியலில் கடந்த வாரம் பொம்மியின் உயிருக்கு ஆபத்து என்ற விஷயம் சித்தார்த்துக்கு தெரிய வந்த நிலையில் அதன் பிறகு இது பொம்மிக்கும் தெரிய வர அதை வெளியே காட்டி கொள்ளாமல் சித்தார்த்துடன் சந்தோஷமாக வாழ ஆசைப்பட்டு தனது வாழ்க்கையை தொடங்கிய நிலையில் இந்த வாரம் இந்த சீரியலில் நடக்க போவது என்ன என்பது குறித்து தெரிய வந்துள்ளது.

அதாவது, சித்தார்த் நம்பூதிரி ஒருவரை சந்திக்கிறான். அவர் கோவிலில் வைத்து யாகம் ஒன்றை நடத்த வேண்டும் என சொல்ல சித்து அதற்கான வேலைகளில் இறங்குகிறான்.

அடுத்து சித்தார்த்த குடும்பத்தினர் எல்லாரும் கோவிலில் வந்து இறங்கி அனைவரும் காத்திருக்க நம்பூதிரி வந்து இறங்க யாகம் வேலைகள் தொடங்குகிறது. இந்த பூஜைக்காக பொம்மி குளத்தில் தண்ணீர் எடுக்க போக அப்போது அளவை தண்ணீரில் முக்கி கொல்ல முயற்சி செய்ய அதிலிருந்து பொம்மி தப்பிக்கிறாள்.

மேலும் படிக்க: சீதா ராமன்: மதுமிதா கொடுத்த அதிர்ச்சி.. சீதாவுக்காக சண்டை போட்ட ராம்

அதன் பிறகு பாம்பு ஒன்று அவளை கடிக்க வர அதிலிருந்தும் பொம்மி தப்பித்து விடுகிறாள். பிறகு குழந்தை ஒன்று விளையாடி கொண்டிருக்க ஜீப் ஒன்று மோத வர பொம்மி குழந்தையை காப்பாற்ற ஓட அவளது உயிருக்கு ஆபத்து வருமோ என காட்சிகள் பரபரப்பாக கடைசியில் அதில் இருந்தும் தப்பிக்கிறாள்.

இப்படி பல தடங்கல் வந்து போகும் நிலையில் நம்பூதிரி இரவு 12 மணி வரை யாரும் எல்லையை விட்டு வெளியே போக கூடாது என கண்டிப்பாக சொல்ல இந்த யாக பூஜையில் பல தடங்கல் உருவாகிறது. சித்தார்த் பொம்மியிடம் எந்த விசயத்தையும் சொல்லாமல் கோவில் பூஜை போல காட்டி கொள்ள குளத்தில் இருந்து தண்ணீர் எடுக்க போன பொம்மி எதோ ஒரு பெண்ணின் சத்தம் கேட்டு எல்லையை தாண்டி வெளியே செல்ல கோவிலில் விளக்கு அலைய தொடங்க பொம்மியும் அம்மா பயந்து நடுங்குகிறாள்.

மேலும் படிக்க: கார்த்தியை சந்தித்த ஜானகி.. அபிராமிக்கு காத்திருந்த அதிர்ச்சி: கார்த்திகை தீபம் அப்டேட்

இதனால் சித்தார்த் பொம்மியை தேடி அலைய மறுபக்கம் எல்லையை தாண்டிய பொம்மியை நேத்ரா கடத்தி செல்கிறாள். வில்லிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து பொம்மியை கொடூரமாக கொன்று விடுகின்றனர்.

பரபரப்பான திருப்பங்களுடன் நினைத்தாலே இனிக்கும்: 
இதற்கிடையில் நடந்த போராட்டங்கள் என்ன? இனி சித்தார்த் வாழ்க்கையில் நடக்கப்போவது என்ன என்ற பரபரப்பான திருப்பங்களுடன் சீரியல் கதைக்களம் நகர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே நினைத்தாலே இனிக்கும் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

மேலும் படிக்க: அவமானப்பட்ட ரங்கநாயகி.. வெற்றி போட்ட கண்டிஷன் - மீனாட்சி பொண்ணுங்க இன்றைய எபிசோட்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News