3 ஆண்டுகளுக்கும் மேலாக ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கும் வலிமை திரைப்படம் பிப்ரவரி 24 ஆம் தேதி ரிலீஸாகிறது. கொரோனா காரணமாக படத்தின் அப்டேட்டுகளை படக்குழு வெளியிடாமல் இருந்ததால், கால்பந்து மைதானம் முதல் கிரிக்கெட் மைதானம் வரை என வலிமை அப்டேட்டை விடாமல் கேட்டு வந்தனர். ரசிகர்களுக்காக கடந்த டிசம்பர் முதல் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியான நிலையில், இன்னும் 4 நாட்களில் படமும் ரிலீஸாக உள்ளது.
ரிலீஸூக்கு முன்பே சுமார் 300 கோடி ரூபாய்க்கு ப்ரீ ரிலீஸ் பிஸ்னஸ் முடிந்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. இந்தப் படத்ததை தொடர்ந்து மீண்டும் போனி கபூர் தயாரிப்பில் நடிக்கும் அஜித் இன் ஏகே 61 படத்தையும் இயக்குநர் வினோத் இயக்குகிறார்.
மேலும் படிக்க | இயக்குநர் சங்கர் இயக்கத்தில் நடிக்கும் எஸ்.ஜே சூர்யா..!
ஏற்கனவே அவர் ஏகே 61 படத்துக்கான பணிகளை முடித்துவிட்டதால் நேரடியாக சூட்டிங் செல்ல படக்குழு தயாராகி வருகிறது. லேட்டஸ்டாக வெளியாகியிருக்கும் தகவலின்படி மார்ச் 9 ஆம் தேதி ஹைதராபாத்தில் ஏகே61 சூட்டிங் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. ராமோஜி பிலிம் சிட்டியில் தொடங்கும் படப்பிடிப்பில் சென்னை மௌண்ட் ரோடு ரீ கிரியேசன் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஒரு தனியார் வலைத்தளத்துக்கு பேட்டி அளித்த அவர்., இந்த படத்தின் ஆக்ஷன் காட்சிகள் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், வலிமை "வெறும் ஆக்ஷன் படம் அல்ல" என்று இயக்குனர் தெரிவிக்கப்பட்டுள்ளது. "இது ஒரு நல்ல குடும்ப பொழுதுபோக்கு, இதில் சமூக பிரச்சினைகளையும் பேசப்பட்டுள்ளது. குடும்பப் படம் என்று சொல்லும்போது, குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள் அல்ல, அது ஒரு குடும்பம் எதிர்கொள்ளும் பிரச்சனை, அது எப்படி ஒரு குற்றமாக மாறுகிறது, ஹீரோ எப்படி அந்தக் குற்றத்தை தன் குடும்பத்தைச் சிதைக்காமல் தடுக்க முயல்கிறார் என்பது தான் இதன் கதை வடிவம். இந்த படமனது குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம்,” என்கிறார்.
மேலும் பேசிய அவர்., அஜித் சார் என்னிடம் இந்தப் படத்தை இயக்கியதற்காக பெருமைப்படுவதாகவும், படத்தைத் பார்த்த பிறகு நான் ஒரு பெருமைமிக்க மகனாக உணர்ந்ததால் எனது அம்மா, அப்பா மற்றும் எனது குடும்பத்தினருக்கு படத்தைத் திரையிடப் போகிறேன் என்று இயக்குனர் வினோத் கூறினார்.
மேலும் படிக்க | 3 ஹீரோயின்களுடன் விஜய்சேதுபதி ரொமான்ஸ்? விக்ரம் அப்டேட்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR