நாக்பூரில் தொடரும் சிறுத்தைப்புலி பலிகள்!

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர்-அமராவதி எல்லைப்பகுதியில் தொடர்ந்து சிறுத்தைப்புலிகள் மர்மமான முறையில் மரணித்து வருகின்றது.

Last Updated : Apr 13, 2018, 04:38 PM IST
நாக்பூரில் தொடரும் சிறுத்தைப்புலி பலிகள்! title=

நாக்பூர்: மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர்-அமராவதி எல்லைப்பகுதியில் தொடர்ந்து சிறுத்தைப்புலிகள் மர்மமான முறையில் மரணித்து வருகின்றது.

அந்தவகையில் இன்று காலை நாக்பூர்-அமராவதி எல்லப் பகுதியில் இருக்கும் ஜூனப்பானி கிராமத்தில், இளம் சிறுத்தை ஒன்று வாகனம் ஒன்றில் இடிப்பட்டு இறந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து வனத்துறை துணை கன்சர்வேட்டர் திரு G மல்லிகர்ஜூனா தெரிவிக்கையில், இன்று காலை சுமார் 6.30 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதுப்போன்ற சம்பவங்கள் இப்பகுதியில் தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றது.

சம்பவம் குறித்து பொதுமக்கள் தகவல் கொடுத்தப் பின்னர் வனப்பகுதி முழுவதும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளத. இச்சம்பவத்தில் ஈட்பட்ட கயவர்கள் குறித்து தகவல்கள் இல்லை, அவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது, விரைவில் பிடிப்படுவர் எனவும் தெரிவித்துள்ளனர்.

இறந்த சிறுத்தையினை மீட்டு தேசிய புலி பாதுகாப்பு ஆணையதிற்கு (NTCA) பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Trending News