ஆஸ்திரேலியா: லட்சுமி நாராயண் கோவில் மீது தாக்குதல், தொடரும் அநியாயம்

Australia Temple Attack: விஷ்ணு கோயிலின் சுவர்களில் இந்தியாவுக்கு எதிரான சொற்றொடர்கள் இருந்த நிலையில், சுவாமிநாராயண் கோயிலிலும் ‘சமூக விரோத சக்திகளால்’ இது போன்ற பல செய்திகள் எழுதப்பட்டன, கோவிலின் பல பாகங்கள் சிதைக்கப்பட்டன. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 4, 2023, 01:46 PM IST
  • பிரிஸ்பேனில் உள்ள லட்சுமி நாராயண் கோவில் ஒன்று சேதப்படுத்தப்பட்டுள்ளது.
  • கோவிலின் மீதான தாக்குதல்களுக்கு காலிஸ்தானி ஆதரவாளர்களே காரணம் என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
  • லட்சுமி நாராயண் கோவில் தாக்கப்பட்டது ஆஸ்திரேலியாவில் வாழும் இந்தியர்களை உணர்வுப்பூர்வமாக பாதித்துள்ளது.
ஆஸ்திரேலியா: லட்சுமி நாராயண் கோவில் மீது தாக்குதல், தொடரும் அநியாயம் title=

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து இந்து கோவில்கள் சேதப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில் தற்போது, பிரிஸ்பேனில் உள்ள லட்சுமி நாராயண் கோவில் ஒன்று சேதப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய எதிர்ப்பு நாடவடிக்கைகள் மற்றும் கோவிலின் மீதான தாக்குதல்களுக்கு காலிஸ்தானி ஆதரவாளர்களே காரணம் என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. லட்சுமி நாராயண் கோவில் தாக்கப்பட்டது ஆஸ்திரேலியாவில் வாழும் இந்தியர்களை உணர்வுப்பூர்வமாக பாதித்துள்ளது. இதை எதிர்த்து பல கண்டனங்கள் வந்த  வண்ணம் உள்ளன.

கோயில்கள் தாக்கப்படுவது, இடிக்கப்படுவது தொடர்பான கசப்பான நினைவுகளும், காட்சிகளும் சனிக்கிழமையன்று பிரிஸ்பேனின் இந்து சமூகத்தின் முன் மீண்டும் கொண்டுவரப்பட்டன. காலையில் கோயிலுக்குச் செல்வது பிரிஸ்பேனின் தெற்கில் அமைந்துள்ள பர்பாங்க் புறநகரில் உள்ள பல உள்ளூர்வாசிகளின் தினசரி வழக்கத்தின் ஒரு பகுதியாகும். இந்த முறை காலிஸ்தான் குண்டர்கள், இந்திய அரசியல் கட்சியான இந்திய தேசிய காங்கிரஸின் ஆதரவாளர்களால் செய்யப்பட்ட ஒரு குற்றத்திற்காக ஆஸ்திரேலிய இந்து சமூகத்தை நேரடியாக குற்றம் சாட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக ஆஸ்திரேலியாவின் விக்டோரியாவில் உள்ள ஒரு இந்து கோயில் காலிஸ்தானி ஆதரவாளர்களால் தாக்கப்பட்டது நினைவிருக்கலாம்.

மெல்போர்னின் ஆல்பர்ட் பூங்காவில் உள்ள ஹரே கிருஷ்ணா கோயிலின் சுவர்களில், “இந்துஸ்தான் முர்தாபாத்” என  இந்திய எதிர்ப்பு சொற்றொடர்கள் எழுதப்பட்டிருந்ததாக சர்வதேச கிருஷ்ண பக்தி உணர்வுக்கான சங்கம் (இஸ்கான்) கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னதாக, பாகிஸ்தானின் லாகூரில் உள்ள காலிஸ்தான் தீவிரவாதிகளிடமிருந்து பிரிஸ்பேனின் காயத்ரி தேவி கோவிலுக்கு மிரட்டல் அழைப்பு வந்தது. பிப்ரவரி 23 அன்று, குயின்ஸ்லாந்தின் பிரிஸ்பேனில் உள்ள இந்திய தூதரக அலுவலகத்தை காலிஸ்தான் போராட்டக்காரர்கள் தாக்கினர். 

மேலும் படிக்க | கச்சத்தீவில் புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!

ஆஸ்திரேலியாவில் மற்றொரு இந்து கோவில் தாக்கப்பட்டது

விக்டோரியாவின் கேரம் டவுன்ஸில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ சிவா விஷ்ணு கோயில் மற்றும் மெல்போர்னில் உள்ள சுவாமிநாராயண் கோயில் ஆகியவை முறையே ஜனவரி 16 மற்றும் 12 ஆம் தேதிகளில் தாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டன. 

விஷ்ணு கோயிலின் சுவர்களில் இந்தியாவுக்கு எதிரான சொற்றொடர்கள் இருந்த நிலையில், சுவாமிநாராயண் கோயிலிலும் ‘சமூக விரோத சக்திகளால்’ இது போன்ற பல செய்திகள் எழுதப்பட்டன, கோவிலின் பல பாகங்கள் சிதைக்கப்பட்டன. 

கோயில் தாக்குதல் சம்பவங்கள் குறித்து இந்திய அதிகாரிகள் ஆஸ்திரேலிய அதிகாரிகளிடம் பேசியுள்ளனர். புது தில்லியின் தலையீட்டைத் தொடர்ந்து, இந்தியாவில் உள்ள ஆஸ்திரேலிய உயர் ஆணையர் பாரி ஓ ஃபாரெல், "மெல்போர்னில் உள்ள இரண்டு இந்துக் கோயில்கள் இடிக்கப்பட்டதில் நாங்கள் அதிர்ச்சியடைந்துள்ளோம். மேலும் ஆஸ்திரேலிய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்." என ட்வீட் செய்திருந்தார்.

ஆஸ்திரேலியாவில் இந்து கோவில்கள் தாக்கப்படுவது வாடிக்கையாகி வருகிறது. இது ஆஸ்திரேலியா வாழ் இந்தியர்கள் மத்தியில் பீதியையும், பதட்டதையும் உணர்வுப்பூர்வமான துக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | டாலர் கனவு படுத்தும் பாடு! அமெரிக்க சட்ட விரோதமாக நுழைய முயன்ற இரு NRI கைது!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News