உலக அளவில், மிகவும் பிரபலமான சுற்றுலா தலங்களில் ஒன்றாக இருப்பதால், ஐக்கிய அரபு அமீரகத்துக்கு, குறிப்பாக துபாய்க்கு, வளரும் மற்றும் வளர்ந்த நாடுகளில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் இருந்து மில்லியன் கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். எனினும், நாடுகளின் அடிப்படையில் சுற்றுலா பயணிகளுக்கான விதிகளும் மாறுபடும். வெவ்வேறு நாட்டு மக்களுக்கு வெவ்வேறு விசா விதிகள் பொருந்தும். சில நாட்டு பயணிகள், துபாய் வந்தவுடன் விசா பெறுகிறார்கள் (விசா-ஆன்-அரைவல்), சில நாட்டவர் அமீரகத்துக்கு வரும் முன் இதற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
ஏறக்குறைய 70 நாடுகளின் குடிமக்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில், வருகையின் போது விசாவை, அதாவது, விசா ஆன் அரைவலைப் பெறுகிறார்கள். மற்ற நாட்டினர் அவர்கள் தங்கள் நாட்டிலிருந்து புறப்படுவதற்கு முன்பு விசாவைப் பெற வேண்டும்.
மேலும் படிக்க | கனடா மாணவர் விசா குறித்து பலரும் அறிந்திராத ‘ஒரு’ தகவல்!
30 நாள் விசா
Emirates, flydubai மற்றும் Etihad Airways இணையதளங்களில் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், சுமார் 20 நாடுகள் அல்லது பிரதேசங்களின் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் 30 நாள் விசாவை இலவசமாகப் பெறுகிறார்கள். அவை பின்வருமாறு:
- அன்டோரா
- ஆஸ்திரேலியா
- புருனே
- கனடா
- சீனா
- ஹாங்காங் (சீனா)
- ஜப்பான்
- கஜகஸ்தான்
- மக்காவ் (சீனா)
- மலேசியா
- மொரீஷியஸ்
- மொனாக்கோ
- நியூசிலாந்து
- அயர்லாந்து
- சான் மரினோ
- சிங்கப்பூர்
- உக்ரைன்
- இங்கிலாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து
- அமெரிக்கா
- வாடிகன் நகரம்
90 நாள் விசா
50 க்கும் மேற்பட்ட நாடுகள் அல்லது பிரதேசங்களைச் சேர்ந்த குடிமக்களுக்கு 90 நாள் மல்டிபிள் என்ட்ரி விசிட் விசா வழங்கப்படுகிறது. இந்த விசா வழங்கப்பட்ட நாளிலிருந்து ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகும். விசா வைத்திருப்பவர்கள் மொத்தம் 90 நாட்களுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்கலாம். அந்த நாடுகளின் பட்டியல் இதோ:
அர்ஜென்டினா
ஆஸ்திரியா
பஹாமாஸ் தீவுகள்
பார்படாஸ்
பெல்ஜியம்
பிரேசில்
பல்கேரியா
சிலி
கொலம்பியா
கோஸ்ட்டா ரிக்கா
குரோஷியா
சைப்ரஸ்
செக் குடியரசு
டென்மார்க்
எல் சல்வடோர்
எஸ்டோனியா
பின்லாந்து
பிரான்ஸ்
ஜெர்மனி
கிரீஸ்
ஹோண்டுராஸ்
ஹங்கேரி
ஐஸ்லாந்து
இஸ்ரேல்
இத்தாலி
கிரிபதி
லாட்வியா
லிச்சென்ஸ்டீன்
லிதுவேனியா
லக்சம்பர்க்
மாலத்தீவுகள்
மால்டா
மாண்டினீக்ரோ
நவ்ரு
நெதர்லாந்து
நார்வே
பராகுவே
பெரு
போலந்து
போர்ச்சுகல்
ருமேனியா
ரஷ்யா
செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ்
சான் மரினோ
செர்பியா
சீஷெல்ஸ்
ஸ்லோவாக்கியா
ஸ்லோவேனியா
சாலமன் தீவுகள்
தென் கொரியா
ஸ்பெயின்
ஸ்வீடன்
சுவிட்சர்லாந்து
உருகுவே
180 நாள் விசா
மெக்சிகன் பாஸ்போர்ட்டை வைத்திருக்கும் பயணிகள் மல்டி எண்ட்ரி 180-நாள் வருகை விசாவிற்கு தகுதியுடையவர்கள். இது வழங்கப்பட்ட நாளிலிருந்து ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகும். இதைக் கொண்டு மொத்தம் 180 நாட்கள் தங்க முடியும்.
ப்ரீ அரேஞ்ட் விசா:
ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவிலிருந்து மற்ற அனைத்து நாடுகளின் பிரஜைகளும் அவர்கள் புறப்படுவதற்கு முன் ஐக்கிய அரபு அமீரக விசாவைக் கொண்டிருக்க வேண்டும்.
எனினும், விசிட் விசா அல்லது அமெரிக்கா வழங்கும் கிரீன் கார்டை வைத்திருக்கும் இந்திய குடிமக்கள், அல்லது இங்கிலாந்து அல்லது ஐரோப்பிய ஒன்றிய வசிப்பிடத்தை வைத்திருப்பவர்கள், ஒரு குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி, அதிகபட்சமாக 14 நாட்கள் தங்குவதற்கான ஆன் அரைவல் விசாவைப் பெறலாம். அவர்கள் ஒரு குறிப்பிட்ட கட்டணத்தை செலுத்தி கூடுதலாக 14 நாட்களுக்கு தங்கியிருக்கவும் விண்ணப்பிக்கலாம்.
மேலும் படிக்க | UAE: எண்ட்ரி விசா வழிமுறைகளில் மாற்றங்கள், விவரம் இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ