நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்தியாவுக்கான இலங்கைத் தூதர் மிலிந்த மொரகொடாவை புதுடெல்லியில் சந்தித்து, இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கான வழிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
இந்தியாவில் உள்ள இலங்கை தூதரகம் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஏப்ரல் நடுப்பகுதியில் நடந்த சந்திப்பைத் தொடர்ந்து, இலங்கைத் தூதர் மிலிந்த மொரகொட, இந்தியாவின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து, தற்போதைய பொருளாதார ஒத்துழைப்பின் நிலையை மதிப்பீடு செய்து, பொருளாதார நிலைமையை சீர் செய்வதற்கான வழிகள் குறித்து ஆலோசனை செய்தார்’ என பதிவிட்டுள்ளது.
இந்தியா- இலங்கை அறக்கட்டளையின் 37வது வாரியக் கூட்டமும் வெள்ளிக்கிழமை புது தில்லியில் மொரகொட மற்றும் இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே ஆகியோரின் கூட்டுத் தலைமையின் கீழ் நடைபெற்றது. 1948 இல் சுதந்திரம் பெற்ற பின்னர் இலங்கை இது வரை இல்லாத மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறது.
இலங்கையில் உணவு மற்றும் அடிப்படைத் தேவைகள், எரிபொருள் மற்றும் எரிவாயு ஆகியவற்றின் கடுமையான பற்றாக்குறையை மக்கள் எதிர்கொள்கின்றனர். இந்திய அரசாங்கம் இலங்கைக்கு பெரிய அளவில் மனிதாபிமான உதவிகளை அளித்து வருகிறது.
மேலும் படிக்க | WISE: இங்கிலாந்தில் இருந்து இந்தியாவிற்கு பணம் அனுப்பும் மலிவான வழிமுறை
இந்தியாவின் மனிதாபிமான உதவித் திட்டத்தின் கீழ் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் மக்களுக்கு அத்தியாவசிய உலர் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் பெட்ரோலியப் பொருட்களை கொள்முதல் செய்வதற்காக 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை கொழும்பிற்கு குறுகிய கால கடனாக வழங்கியது.
ரசாயன உரங்களின் இறக்குமதியை தங்கள் அரசாங்கம் நிறுத்தியதை அடுத்து, 2021 நவம்பர் மாதம், இந்தியா 100 டன் நானோ நைட்ரஜன் திரவ உரங்களை இலங்கைக்கு வழங்கியது.
கடந்த 50 நாட்களில் இலங்கை மக்களுக்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனால் வழங்கப்பட்ட 40,000 மெட்ரிக் டன் சரக்கு உட்பட கிட்டத்தட்ட 200,000 மெட்ரிக் டன் அளவிலான எரிபொருளை இந்தியா வழங்கியுள்ள்து. எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகே எரிபொருள் சரக்கு அனுப்பி உதவிய இந்திய அரசுக்கு நன்றி தெரிவித்தார்.
இலங்கையில், நெருக்கடி நிலையை தீர்க்கவும், பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும் உதவுவதற்காக இந்தியா மேலும் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்களை இலங்கைக்கு கடன் வழங்குவதாகவும் அறிவித்தது. அதோடு, 11,000 மெட்ரிக் டன் அரிசியை கொழும்புக்கு வழங்கியது.
முன்னதாக, பல மாதங்களாக பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்த இலங்கை அரசு திவால் நிலையை அறிவித்தது. இலங்கை அரசு திவாலாகிவிட்டதாக அந்நாட்டின் மத்திய வங்கி ஆளுநர் அறிவித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
மேலும் படிக்க | ஆஸ்திரேலியாவுக்கு தப்பி செல்ல முயன்ற 21 இலங்கையர்கள் கைது!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR