பொருளாதார நெருக்கடி - பீஸ்ட் மோடுக்கு சென்ற இலங்கை ரசிகர்கள்

பொருளாதார நெருக்கடியால் நாடு ஸ்தம்பித்தாலும் பீஸ்ட் படத்தை காண்பதற்கு ரசிகர்கள் இலங்கையில் குவிந்தனர்.  

Written by - க. விக்ரம் | Last Updated : Apr 13, 2022, 01:31 PM IST
  • இலங்கையில் வெளியான பீஸ்ட்
  • இலங்கையில் பொருளாதார நெருக்கடி
  • பீஸ்ட்டுக்கு இலங்கையில் வரவேற்பு
பொருளாதார நெருக்கடி - பீஸ்ட் மோடுக்கு சென்ற இலங்கை ரசிகர்கள் title=

விஜய் நடிப்பில் நெல்சன் உருவாக்கியிருக்கும் படம் பீஸ்ட். பூஜா ஹெக்டே, செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படமானது இன்று காலை உலகம் முழுவதும் வெளியானது.

படத்தை பார்ப்பதற்காக ரசிகர்கள் அதிகாலையிலேயே திரையரங்குக்கு படையெடுக்க ஆரம்பித்தனர். மேலும் கட் அவுட் வைத்து பாலாபிஷேகம் செய்து திருவிழா போல் கொண்டாடினர்.

Srilanka Crisis

படத்தை பார்த்த ரசிகர்கள் கலவையான விமர்சனத்தையே கொடுத்துவருகின்றனர். இயக்குநர் நெல்சன் திலீப்குமார் சொதப்பிவிட்டார் எனவும் சிலர் கூறுகின்றனர்.

மேலும் படிக்க | இலங்கை கிரிக்கெட் வீரர்கள் IPLல் இருந்து விலக வேண்டும்: அர்ஜுன ரணதுங்க

இந்நிலையில் பீஸ்ட் படம் இலங்கையிலும் திட்டமிட்டப்படி வெளியானது. அந்நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாலும், மக்கள் போராட்டத்தில் குதித்திருப்பதாலும் இலங்கையில் பீஸ்ட் படத்துக்கான வரவேற்பு எப்படி இருக்கும் என்ற கேள்வி எழுந்திருந்தது.

Srilanka Crisis

ஆனால், கொழும்புவில் 50க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் பீஸ்ட் வெளியானதை அடுத்து படத்தை பார்ப்பதற்கு ரசிகர்கள் குவிந்தனர். அதேசமயம், இலங்கையில் பீஸ்ட் படத்தின் டிக்கெட் ஒன்று 800 ரூபாயிலிருந்து 3,000 ரூபாய்வரை விற்கப்படுவதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க | உக்ரைன் சமாதானப் பேச்சுக்கள் முட்டுச்சந்தை எட்டியுள்ளது: விளாடிமிர் புடின்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News