ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த பரோபகார தொழிலதிபர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர், இந்திய மாநிலமான கேரளாவின் பழங்குடியினர் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவர்களுக்காக உலகத் தரம் வாய்ந்த 3டி கல்வி அரங்கை திறந்துள்ளார். ஷார்ஜாவைத் தலைமையிடமாகக் கொண்ட ஏரீஸ் குழுமத்தின் நிறுவனர் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான டாக்டர் சோஹன் ராய், கேரள மாநிலத்தின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள பழங்குடியினர் குடியிருப்பான அட்டப்பாடி, அகலியில் உள்ள அரசு தொழிற்கல்வி மேல்நிலைப் பள்ளியில் இந்த வசதியை இலவசமாகக் கட்டினார்.
அட்டப்பாடியில் பழங்குடியின மக்களின் கஷ்டங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘ம்ம்ம்ம்... வலியின் ஒலி’ படத்தின் படப்பிடிப்பின் போதுதான் டாக்டர் ராய் இந்த சிறிய நகரத்தில் குழந்தைகளின் நிலைமையை அறிந்து கொண்டார். அட்டப்பாடியில் அதிக மாணவர்கள் பாதியில் உயர்நிலைப் பள்ளிப்படிப்பை நிறுத்தி விடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அங்கு படப்பிடிப்பில் இருந்தபோது, அவர்களின் நிலையை அறிந்து, அப்பகுதி மக்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என டாக்டர் ராய் முடிவு செய்தார். உலகையே மாற்றும் ஆற்றல் கல்விக்கு உண்டு. பொழுதுபோக்கின் மூலம் கல்வி என்ற புரட்சிகர சிந்தனையில் இருந்து ஒரு கல்வி அரங்கம் தொடங்கப்பட்டது.
மேலும் படிக்க | சென்னை விமானநிலையத்தில் ரூ.11.75 கோடி மதிப்புடைய போதைப்பொருள் பறிமுதல்: ஒருவர் கைது
இந்த கல்விசார் ஹோம் தியேட்டரில் மிகச் சிறந்த பெஸ்ட்-இன்கிளாஸ் விசுவல் அமைப்பைக் கொண்டுள்ளது. இது மாணவர்களுக்கு கருத்தரங்குகள் மற்றும் வகுப்புகளில் கலந்துகொள்ளும் போது நம்பமுடியாத அனுபவத்தை வழங்குகிறது. மாணவர்களுக்கு சினிமா பற்றிய ஆழமான பார்வையை வழங்குவதற்காக பள்ளியில் ஒரு திரைப்பட கிளப் தொடங்கப்பட்டுள்ளது.
தியேட்டரில் உலகின் சிறந்த கிரிஸ்டல் கிளியர் 4K ரெசல்யூஷன் ப்ரொஜெக்ஷன் சிஸ்டம் உள்ளது. இதில் ஒலியை ரசிக்க வைக்கும் அதிசயிக்க வைக்கும் ஒலி அமைப்பு, கப் ஹோல்டர்கள் கொண்ட தியேட்டர் நாற்காலிகள், தியேட்டர் போன்ற சவுண்ட் சிஸ்டம் மற்றும் ப்ரொஜெக்ஷன் ஸ்கிரீன், தெளிவான திரையைப் பார்ப்பதற்கான தியேட்டர் பாணி கேலரி அமைப்பு மற்றும் பலவற்றை உள்ளடக்கியது.
டாக்டர் ராய், இந்த வசதி சாதாரண திரையரங்கு போல் இல்லாமல் கல்விக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை கோடிட்டுக் காட்டினார்.
இந்த கல்வி அரங்கம் கருத்தரங்குகள் மற்றும் வகுப்புகளை நடத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு தானியங்கி விளக்கு அமைப்பைக் கொண்டுள்ளது. இது வகுப்பின் போது ஆசிரியர் விளக்குகளை கட்டுப்படுத்த அனுமதிக்கிறது. அதேபோல், மாணவர்கள் ஆக்கப்பூர்வமான சாராத செயல்பாடுகள் மற்றும் படிப்புகளில் ஈடுபடலாம், இது அவர்களின் தனிப்பட்ட வளர்ச்சிக்கு உதவும்.
இந்த தியேட்டரை டாக்டர் ராய் கடந்த வாரம் திறந்து வைத்தார். திரைப்படக் கழகத்தை சிறப்பித்து அவர் பேசுகையில், “மாணவர்கள் உலக சினிமாவை அறிந்துகொள்ளவும், பள்ளியில் திரைப்பட விழாக்களை நடத்தவும், திரைப்பட விவாதங்கள் மற்றும் விமர்சனங்கள் மூலம் கலை மற்றும் தலைமைத்துவ திறன்களை வளர்த்துக் கொள்ளவும் இது உதவும். மலையாள சினிமாவின் அடுத்த பெரிய பெயர் இங்கிருந்து வரட்டும்” என்று கூறினார்.
பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், குடியிருப்போர், பாலக்காடு மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் நீத்து பி.சி., மாவட்ட கல்வி இணை இயக்குனர் மனோஜ்குமார் பி.வி. மற்றும் பள்ளி பிடிஏ தலைவர் வி.கே.ஜேம்ஸ் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
மேலும் படிக்க | இந்தியா-அமீரகம் இடையில் புதிய விமானங்களை அறிவித்தது இண்டிகோ நிறுவனம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ