சோம்பு நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்: நம் சமையலறையில் நாம் பயன்படுத்தும் பல மசாலா பொருட்கள் நாம் செய்யும் சமையலை ருசிகரமாக்குவதோடு இன்னும் பல நன்மைகளையும் கொண்டுள்ளன. இவை பல வழிகளில் நமது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கின்றன. சோம்பு நீரால் கிடைக்கும் நன்மைகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
சோம்பு ஒரு மசாலாப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டாலும், அது வீட்டு வைத்தியத்திலும் பயன்படுத்தப்படுகிறது. வயிற்றின் வெப்பத்தைத் தணிப்பதோடு, பல உடல்நலப் பிரச்சினைகளையும் பெருஞ்சீரக நீர் சரி செய்கிறது.
வெறும் வயிற்றில் சோம்பு தண்ணீரை ஒருவர் உட்கொண்டால், அதன் மூலம் எடை குறைகக்கப்படுவது மட்டுமல்லாமல், உடல் பருமனும் கட்டுப்படுத்தப்படும். ஆகையால் வெறும் வயிற்றில் பெருஞ்சீரக தண்ணீரை குடிப்பது மிக அவசியமாகும்.
கண்களின் பலவீனத்தைப் போக்க சோம்பு நீர் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வைட்டமின் ஏ உடன், பெருஞ்சீரகத்தில் அழற்சி எதிர்ப்பு பண்புகளும் காணப்படுகின்றன. இது கண்களின் பலவீனத்தை நீக்குவது மட்டுமல்லாமல், கண்களின் வீக்கம் மற்றும் எரிச்சலிலிருந்து நிவாரணம் அளிக்கும். தினமும் பெருஞ்சீரக தண்ணீரை குடிப்பதால், கண்கள் பலமடையும்.
பெருஞ்சீரக நீர் சரும பிரச்சனையை சரி செய்வதில் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சரும பிரச்சனைகள் இருப்பவர்கள் தொடர்ந்து இந்த நீரை பருகி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். கருஞ்சீரகத்தில் வைட்டமின் சி உள்ளது. இது சருமத்தை பளபளப்பாக்குவது மட்டுமல்லாமல், முகத்தில் உள்ள கறை போன்றவற்றிலிருந்தும் நிவாரணம் அளிக்கும். தொடர்ந்து பெருஞ்சீரக தண்ணீர் குடித்து வந்தால், சருமம் பளபளப்பாக இருக்கும்.