பிப்ரவரி 19ம் தேதியன்று குரு அஸ்தமனமாகிறார். ஜோதிட சாஸ்திரத்தில் மிகவும் மங்களகரமான கிரகமாக கருதப்படும் தேவகுரு பிரகஸ்பதி அஸ்தமனமாவது அசுபமானதாக கருதப்படுகிறது. இருப்பினும், அஸ்த குரு 12 ராசிகளில் சிலவற்றுக்கு சுபமான பலன்களையும் கொடுப்பார்.
இந்த முறை குரு அஸ்தமனமாவதால் 6 ராசிக்காரர்களுக்கு கடுமையான சூழ்நிலைகளை ஏற்படுத்தலாம். இவர்கள் மார்ச் 27 ஆம் தேதி வரை கவனமாக இருக்க வேண்டும் .
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)
கன்னி ராசிக்காரர்களுக்கு, இந்த நேரம் அவர்களின் தொழிலில் சிரமங்களைக் கொண்டுவரும். வேலை மாற வேண்டி வரலாம். வியாபாரிகளுக்கு நஷ்டம் ஏற்படலாம். இந்த நேரத்தில் கவனமாக முடிவெடுக்கவேண்டும். மார்ச் 27க்கு பிறகு நிலைமை மாறிவிடும்
அஸ்தமனமாகும் குருவினால், ரிஷபம் ராசிக்காரர்களுக்கு வேலையில் சிரமங்கள் ஏற்படும். பணியிடத்தில் அதிருப்தியே நிலவும். சகாக்களால் பிரச்சனைகள் ஏற்படும். இந்த நேரத்தை பொறுமையுடன் எதிர்கொள்ளுங்கள்.
தனுசு ராசிக்காரர்கள் தங்கள் தொழிலில் சிரமங்களை சந்திக்க நேரிடும். இடமாற்றம் நேரிடும். அல்லது வேலையில் மாற்றம் ஏற்படலாம். அவசரப்பட்டு முடிவுகளை எடுக்காமல் இருப்பது நல்லது. பொறுமையாய் இருந்தால் போதும்.
மகர ராசிக்காரர்களுக்கு மார்ச் 27 வரை குடும்பத்தில் சவால்களை சந்திக்க நேரிடும். வீட்டில் ஒருவருடன் தகராறு ஏற்படலாம். பெரியவர்களிடம் சண்டை வந்தாலும் அமைதியாக இருக்கவும். தொழிலும் சற்று மந்தமாகவே இருக்கும்.
கடக ராசிக்காரர்களுக்கு குருவின் அஸ்தமனம் தொழிலில் பிரச்சனைகளை ஏற்படுத்தும். கடின உழைப்புக்கு பலன் கிடைக்காது. சிறிய வேலைகளைச் செய்வது கூட கடினமாக இருக்கும்.
கும்ப ராசிக்காரர்கள் வேலையில் சிக்கல்களை சந்திக்க நேரிடும். எதிர்பாராத பிரச்சனைகள் வரலாம். இடமாற்றம் ஏற்படலாம்.