தேவசயனி ஏகாதசி முதல் 4 மாதங்களுக்கு யோக நித்திரைக்கு செல்லும் விஷ்ணு! சதுர்மாஸ்ய விரதம்!

Chaturmas 2024 : 4 மாத சதுர்மாதத்தில் பகவான் ஸ்ரீ ஹரி விஷ்ணு யோக நித்திரைக்கு செல்கிறார். ஆடி மாதம் சயன ஏகாதசியில் தொடங்கி, கார்த்திகை மாத உத்தான ஏகாதசி வரை ஸ்ரீஹரி யோக நித்திரையில் இருப்பார். இந்த நான்கு மாதங்களில் கடைபிடிக்க வேண்டியவை... 

ஜூலை 17 ஆம் தேதி தேவசயனி ஏகாதசி நாளில் சர்வார்த்த சித்தி யோகம், அமிர்த சித்தி யோகம், சுப யோகம், சுக்ல யோகம் போன்ற பல மங்களகரமான யோகங்கள் உருவாகின்றன.

1 /8

ஏகாதசி என்பது இந்து மதத்தில் மிகவும் முக்கியமானது. அதிலும் சதுர்மாஸ்ய விரதம் என்பது மிகவும் முக்கியமானது  

2 /8

ஆடி மாத ஏகாதசியில் தொடங்கும் ஸ்ரீஹரியின் யோக நித்திரைக் காலம் நான்கு மாதங்கள் தொடரும். கார்த்ஹ்திகை மாத வளர்பிறை ஏகாதசியான உத்தான ஏகாதசியுடன் முடிவடையும்

3 /8

ஆடி மாத பெளர்ணமி முதல் கார்த்திகை மாத பெளர்ணமி வரையிலும் சிலர் சதுமாஸ்யத்தை அனுசரிக்கின்றனர்

4 /8

இந்து சமயத்தில் சாதுர்மாசிய விரத காலத்தில், நான்கு மாதங்கள் ஒரே இடத்தில் தங்கி, வேத வேதாந்தங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்வார்கள்

5 /8

இந்த நான்கு மாதங்களும் துறவிகள் உணவுக் கட்டுப்பாட்டையும் கடைபிடிப்பார்கள். முதல் மாதம் உணவில் காயும் பழங்களும் இருக்கும். இரண்டாம் மாதம் பால், மூன்றாம் மாதம் தயிர் மற்றும் நான்காம் மாதம் பருப்பு வகைகள் என ஒவ்வொரு மாதமாக ஒவ்வொன்றை உணவில் இருந்து விலக்குவார்கள்.  

6 /8

சாதுர்மாஸ்ய காலத்தில் கடைபிடிக்கும் விரதத்தை, வேதம் மற்றும் வேதாந்தக் கல்வியை கற்பித்த குருமார்களை நினைவு கூறும் வகையில் ஆடி மாத பௌர்ணமி அன்று துறவிகள், வேதவியாசரை வழிபட்டுத் துவக்குவார்கள்

7 /8

பகவான் ஸ்ரீ ஹரி விஷ்ணு யோக நித்திரையில் இருக்கும் சதுர்மாஸ்யத்தில் பலர் சுப காரியங்களைத் தவிர்ப்பார்கள்  

8 /8

விஷ்ணுவின் யோக நித்திரைக் காலத்தை சாஸ்திரப்படி கடைபிடித்தால் பாவங்கள் அனைத்தும் விலகும் என்பது தொன்மமான நம்பிக்கை