IPL போட்டிகளில் அதிக முறை ஆட்டநாயகன் விருதுகளை பெற்ற ஐபிஎல் சூப்பர் ஸ்டார்கள்

பிரபல கிரிக்கெட் தொடரான ஐபிஎல் போட்டிகளில்  பெரும் முத்திரையைப் பதித்துள்ள வீரர்கள் சிலர் தான். அத்கில் அதிக முறை ஆட்டநாயகன் விருதுகளை வென்ற வீரர்களின் பட்டியல்....

1 /5

இந்த பட்டியலில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (Royal Challengers Bangalore) அணியின் முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் முதலிடத்தில் உள்ளார். முன்னாள் கேப்டனான அவர் மொத்தம் 25 ஆட்டநாயகன் விருதுகளை பெற்றுள்ளார். 184 ஆட்டங்களில், டி வில்லியர்ஸ் மூன்று சதங்கள் உட்பட 151.68 ஸ்ட்ரைக் ரேட்டில் 5,162 ரன்களுடன் தனது ஐபிஎல் வாழ்க்கையை முடித்தார். தற்போது டெல்லி கேபிடல்ஸ் (டிசி) என அழைக்கப்படும் டெல்லி டேர்டெவில்ஸ் (டிடி) அணியிலும் அவர் விளையாடியுள்ளார்.

2 /5

ஐபிஎல் ஜாம்பவான் கிறிஸ் கெயில் இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். இதுவரை ஆர்சிபி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) மற்றும் பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) அணிகளை பிரதிநிதித்துவப்படுத்திய யுனிவர்ஸ் பாஸ், ஐபிஎல் வரலாற்றில் 22 ஆட்டநாயகன் விருதுகளை வென்றுள்ளார். அவர் ஐபிஎல் 2022 இல் விளையாடவில்லை, ஆனால் அடுத்த சீசனில் கெயில் மீண்டும் வருவார் என நம்பப்படுகிறது. கிறிஸ் கெயில், 39.72 சராசரி மற்றும் 148.96 ஸ்ட்ரைக் ரேட்டுடன் மொத்தம் 4,965 ரன்கள் குவித்துள்ளார்.

3 /5

ரோஹித் ஷர்மா இதுவரை 18 ஆட்ட நாயகன் விருதுகளுடன் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். ரோஹித் -- ஒட்டுமொத்தமாக மூன்றாவது அதிக ரன் எடுத்தவர் (5,764) -- மும்பை இந்தியன்ஸ் (MI) ஐ ஐந்து முறை ஐபிஎல் பட்டத்தை வெல்ல வைத்தவர்.   ரோஹித் தனது பேட்டிங் திறமைகளுடன், ஐபிஎல் ஹாட்ரிக் சாதனையையும் பதிவு செய்துள்ளார்.

4 /5

இரண்டு பெரிய வீரர்கள் கூட்டாக இணைந்து நான்காவது இடத்தைப் பிடித்துள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) கேப்டன் எம்எஸ் தோனி மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் (டிசி) தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் ஆகியோர் தலா 17 ஆட்டநாயகன் விருதுகளை வென்றுள்ளனர். டோனி 4,800 ஐபிஎல் ரன்களுடன் CSK அணிக்கு 4 ஐபிஎல் கோப்பைகளை பெற்றுத் தந்துள்ளார்.  

5 /5

ஷேன் வாட்சன், யூசுப் பதான் -- முன்னாள் ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) அணி வீரர்கள் -- மற்றும் சாம்பியன் கிரிக்கெட் வீரர்கள் ஐந்தாவது இடத்தில் உள்ளனர். இருவரும் தலா 16 ஆட்ட நாயகன் விருதுகளை வென்றுள்ளனர்.