சனி உதயம்: மார்ச் மாதம் முதல் இந்த ராசிகளுக்கு அமோகமான வாழ்க்கை, அதிரடி லாபம்

Shani Uday in March 2023: மார்ச் 5 ஆம் தேதி சனி உதயமாக உள்ளார். கும்ப ராசியில் தற்போது அஸ்தமன நிலையில் இருக்கும் சனி, உதயமாகி மேஷம், கடகம் உள்ளிட்ட பல ராசிகளுக்கு தனது மூலத்திரிகோண ராசி பலனைத் தருவார், இதன் காரணமாக ஹோலி முதல் 5 ராசிக்காரர்களுக்கு சனிபகவானின் சிறப்புப் பலன்கள் கிடைக்கும். சனியின் உதயத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிக பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

1 /6

சனி உதயமாவதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், சில ராசிக்காரர்களுக்கு சனியின் உதயம் மிக அற்புதமாகவும் சிறப்பாகவும் அமையப் போகின்றது. சனியின் உதயத்தால் அதிகப்படியான சுப பலன்களை அனுபவிக்கவுள்ள அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் விரிவாகக் காணலாம். 

2 /6

மேஷ ராசிக்காரர்களுக்கு சனியின் உதயத்தால் உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுதலை கிடைக்கும். பண வரவு அதிகமாகும். வெளிநாடு செல்ல விருப்பம் உள்ளவர்களுக்கு இந்த நேரம் சாதகமானது. உங்களுக்கு இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கும். தொழிலில் நல்ல வாய்ப்புகள் அமையும். பொருளாதார நிலை முன்பை விட மேம்படும்.  

3 /6

கடக ராசிக்காரர்களுக்கு சனியின் உதயம் சிறப்பான பலன்களைத் தரும். உங்கள் உறவுகள் மேம்படும். விவாதத்தில் ஈடுபடுவதை தவிர்க்கவும். தந்தையின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். நீங்கள் வாகனம் வாங்க நினைத்தால், இந்த நேரம் உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும்.  

4 /6

சனியின் உதயத்தால் சிம்ம ராசிக்காரர்களின் வாழ்க்கை முன்பை விட மேம்படும். மகிழ்ச்சியும் வளமும் இருக்கும். முதலீடு செய்ய இது சரியான நேரம். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.

5 /6

தனுசு ராசிக்காரர்கள் ஒரு புதிய வேலையைத் தொடங்கும் எண்னத்தில் இருந்தால், இந்த நேரம் அதற்கு மிகவும் நல்லது. தந்தையின் முழு ஆதரவையும் பெறுவீர்கள்.

6 /6

கும்ப ராசிக்காரர்களுக்கு சனி பகவானின் உதயம் மிக அனுகூலமான பலன்களை அளிக்கும். பண விஷயத்தில் கவனமாக இருக்கவும். பொருளாதாரத்தில் முன்பை விட அதிக முன்னேற்றம் ஏற்படும். சக ஊழியர்களின் முழு ஒத்துழைப்பையும் பெறுவீர்கள். விவாதங்களிலிருந்து இருந்து விலகி இருந்தால் நல்லது.