கடல் கன்னிகளாக மாறி உடற்பயிற்சி செய்யும் பெண்கள்: Fitness-க்கான புதிய டிரெண்ட்

இங்கிலாந்தில் ஒரு புதிய உடற்பயிற்சி போக்கு டிரெண்ட் ஆகி வருகிறது. இங்கு பெண்கள் தங்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள மணிக்கணக்காக தண்ணீரில் செலவிடுகிறார்கள். இதற்காக பல குழுக்கள் உள்ளன. 

அவை இதற்கான அனைத்து உபகரணங்களையும் வழங்குகின்றன. கடந்த சில நாட்களாக இந்த போக்கின் அங்கமாக மாறியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

1 /4

உடற்பயிற்சியின் புதிய போக்கு இங்கிலாந்தில் டிரெண்ட் ஆகி வருகிறது. இங்கே பெண்கள் தேவதைகளைப் போல் உடை அணிந்து கடலின் ஆழத்தில் இறங்குகிறார்கள். இந்த போக்கு சாகசத்துடன் ஃபிட்னசை பெற விரும்புபவரகளுக்கு மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கு மெர்மெய்ட் நீச்சல் என்று பெயரிடப்பட்டுள்ளது. (புகைப்பட ஆதாரம்: மிரர்)

2 /4

இந்த சிறப்பு நீச்சல் பயிற்சிக்காக ஒரு சிறப்பு உடையும் அணியப்படுகிறது. இந்த உடையை அணிந்த பெண்களைப் பார்க்க ஒரு தேவதை தண்ணீரில் நீந்துவது போல் தெரிகிறது. மெல்லிய துணியால் செய்யப்பட்ட இந்த நீச்சல் உடையை அணிந்த பிறகு, கால்கள் இணைக்கப்படுகின்றன. 37 வயதான ஜேட் இந்த புதிய உடற்பயிற்சி முறையை பெரிதும் விரும்புகிறார். இருப்பினும், துவக்கத்தில் கடலுக்குள் செல்ல அவருக்கு அச்சம் இருந்தது. ஆனால் இப்போது அவர் அதற்கு அடிமையாகிவிட்டார். (புகைப்பட ஆதாரம்: மிரர்)

3 /4

நார்தாம்ப்டனில் வசிக்கும் 31 வயதான சாரா டெய்லி, ஒரு தேவதையாக கடலில் நீந்துவது உண்மையில் ஒரு பரவசத்தை அளிக்கிறது என்று கூறுகிறார். இந்த புதிய உடற்பயிற்சி போக்கின் ஒரு பகுதியாக மற்ற மக்களையும் சாரா ஊக்குவிக்கிறார். அவர் கூறுகையில், 'எனக்கு சிறுவயதிலிருந்தே நீச்சல் பிடிக்கும். வளர்ந்த பிறகு, நான் ஸ்கூபா டைவிங் கற்றுக்கொண்டேன். பிறகு மற்றவர்களுக்கு கற்பிக்க ஆரம்பித்தேன். இன்று நான் மக்களுக்கு இந்த வகை நீச்சலைக் கற்றுக்கொடுக்கிறேன். (புகைப்பட ஆதாரம்: மிரர்)

4 /4

இந்த பரபரப்பான உடற்பயிற்சி போக்கை பிரபலப்படுத்த இங்கிலாந்தில் பலர் முயற்சித்து வருகின்றனர். லில்லி-ரோஸ் ஷெப்பர்டும் அவர்களில் ஒருவர். லில்லி பேஸ்புக் சமூகமான UK மெர்போட்டின் நிறுவனர் ஆவார். அவர் கூறுகையில், ’நான் குழுவை ஆரம்பித்தபோது, ​​நாங்கள் 10 பேர் மட்டுமே இருந்தோம். ஆனால் இன்று எங்களிடம் 500 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். ’ என்று கூறினார். (புகைப்பட ஆதாரம்: Elitehavens).

You May Like

Sponsored by Taboola