ராகுல் ட்ராவிட் இடத்தை பிடிக்க போட்டி போடும் 6 பயிற்சியாளர்கள்! யார் யார் தெரியுமா?

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக உள்ள ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் ஜூன் மாதத்துடன் முடிவடைய உள்ள நிலையில், புதிய பயிற்சியாளரை இந்திய அணி தேடி வருகிறது. அடுத்த பயிற்சியாளராக வர பின்வரும் 6 பேருக்கு வாய்ப்புள்ளது.

 

1 /6

ஜஸ்டின் லாங்கர் முன்னாள் ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தற்போது லக்னோ அணியின் தலைமைப் பயிற்சியாளராக உள்ளார். இதனால் அவர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு சிறந்த தேர்வாக முடியும்.

2 /6

ரிக்கி பாண்டிங் இரண்டு உலகக் கோப்பை பட்டங்களை வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் ரிக்கி பாண்டிங் இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளராக வர வாய்ப்புள்ளது. அவர் தற்போது டெல்லி கேபிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ளார்.

3 /6

ஆண்டி பிளவர் ஆண்டி ஃப்ளவர் நீண்ட காலமாக பயிற்சியாளராக இருந்து வருகிறார். அவரது தலைமையில் ஆர்சிபி அணி ஐபிஎல் 2024ல் சிறப்பாக ஆடி வருகிறது. பிளேஆஃப்களுக்கு கூட தகுதி பெற்றுள்ளது.

4 /6

கௌதம் கம்பீர் கெளதம் கம்பீர் ஐபிஎல்லில்  KKR மற்றும் LSG க்கு வழிகாட்டியாக இருந்தது மற்றும் இந்திய கிரிக்கெட் அணியில் ஒரு பேட்டராக அவரது நிலைப்பாடு அவரை மற்றொரு சிறந்த தேர்வாக ஆக்குகிறது.

5 /6

ஸ்டீபன் ஃப்ளெமிங் நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீபன் ஃப்ளெமிங் இந்திய அணி பயிற்சியாளராக வர வாய்ப்புள்ளது.  தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளராக உள்ளார். 

6 /6

விவிஎஸ் லட்சுமணன் டிராவிட்க்கு பிறகு  விவிஎஸ் லட்சுமணன் அந்த இடத்திற்கு வர அதிக வாய்ப்புள்ளது. இந்திய அணியின் இடைக்கால பயிற்சியாளராகவும் இருந்துள்ளார் லட்சுமணன். தற்போது இவர் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியின் (NCA) இயக்குநராக உள்ளார்.