மருந்தில்லாமல் இயற்கையாக கொலஸ்ட்ராலை குறைப்பது எப்படி?

உடலில் நல்ல கொலஸ்ட்ரால் மற்றும் கெட்ட கொலஸ்ட்ரால் என்று இருவகையுண்டு, இதில் கெட்ட கொலஸ்ட்ரால் உடலில் அதிகப்படியான ஆபத்துகளை விளைவிக்கும்.

 

1 /5

ஒழுங்கான டயட்டை பின்பற்றுவது அவசியமானது, தினசரி உங்களது உணவில் நார்சத்து, நல்ல கொழுப்புகள் இடம்பெறுவதை கவனித்து கொள்ளுங்கள்.  

2 /5

எண்ணெயில் அதிகம் வறுத்த பொறித்த மற்றும் அதிகம் சர்க்கரை நிறைந்த உணவுகள் உங்கள் உடலில் கெட்ட கொழுப்பின் அளவை அதிகரித்துவிடும்.  

3 /5

அதிகளவிலான உடலுழைப்பு கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த சிறந்த வழி, உடற்பயிற்சி செய்வது, நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமராமல் ஏதேனும் சுறுசுறுப்பாக வேலை செய்வதன் மூலமும் கொலஸ்ட்ராலை குறைக்கலாம்.  

4 /5

மன அழுத்தத்தின் காரணமாகவும் ஒருவரது உடலில் கொலஸ்ட்ராலின் அளவு உயரும்.  கொலஸ்ட்ராலை குறைக்க நினைப்பவர்கள் மன அழுத்தம், பதட்டமின்றி இருப்பது அவசியமானதாகும்.  

5 /5

புகைப்பிடிப்பது மற்றும் மது அருந்துவது  பல்வேறு நோய் பாதிப்புகளுக்கு வழிவகுக்கும் அதிலும் குறிப்பாக இது உடலில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிக்கிறது.  புகைபிடிப்பது மற்றும் மது அருந்துவதை நிறுத்தினால் கொலஸ்ட்ராலை குறைக்கலாம்.