July Month Important Dates : ஜூலை மாதத்தில் பல முக்கியமான சில விஷயங்கள் செய்ய வேண்டும். சில விதிகள் மாறுகின்றன. இவற்றைத் தவறவிட்டால் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்
ஜூலை மாதம் பல விஷயங்களில் முக்கியமானது. ஆண்டின் முதல் பாதி முடிவுக்கு வந்து, இரண்டாம் பாதி தொடங்குகிறது. நிதியாண்டின் இரண்டாம் காலாண்டு தொடங்குகிறது
அடுத்த வாரம் திங்கட்கிழமை முதல் புதிய மாதம் தொடங்கியதும் நீங்கள் கவனிக்க வேண்டிய சில முக்கியமான விஷயங்கள் உள்ளன. வருமான வரி கணக்கு (ITR) தாக்கல் செய்வது உட்பட சில பணிகளை முடிப்பதற்கான காலக்கெடு உள்ள ஜூலை மாதம். அதேபோல், சில முக்கியமான சில விதிகள் மாறுகின்றன. முக்கிய தேதிகள் மற்றும் மாற்றங்கள் என்ன என்பதைத் தெரிந்துக் கொள்வோம்
நீங்கள் சம்பளம் வாங்கும் நபராக இருந்தால், ஜூலை 31க்குள் உங்கள் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும். ஐடிஆர் தாக்கல் செய்யும் காலக்கெடுவைத் தவறவிட்டால், அபராதம் விதிக்கப்படலாம்.
Paytm Payments Bank தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி குறிப்பிடத்தக்க நடவடிக்கை எடுத்துள்ளது. ஜூலை 20, 2024 முதல், ஜீரோ பேலன்ஸ் உள்ள செயலற்ற வாலெட்டுகள் மற்றும் ஒரு வருடம் அல்லது அதற்கு மேல் பணப் பரிமாற்றங்கள் இல்லாத வாலெட்டுகள் மூடப்படும். Paytm இந்த மாற்றம் குறித்து வாடிக்கையாளர்களுக்கு தகவல் தெரிவித்து வருகிறது.
ஜூலை 1 முதல், ஐசிஐசிஐ வங்கி அதன் கிரெடிட் கார்டு விதிகளில் மாற்றங்களைச் செயல்படுத்தும். கார்டு மாற்றும் கட்டணம் ரூ.100ல் இருந்து ரூ.200 ஆக உயர்கிறது
ஜூலை 1, 2024 முதல் RuPay பிளாட்டினம் டெபிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கான ஓய்வறை அணுகல் திட்டத்தை பஞ்சாப் நேஷனல் வங்கி திருத்தும். உள்நாட்டு விமான நிலையம் அல்லது ரயில்வே லவுஞ்ச் அணுகல் காலாண்டுக்கு ஒருமுறை கிடைக்கும், மேலும் சர்வதேச விமான நிலைய லவுஞ்ச் அணுகல் வருடத்திற்கு இரண்டு முறை மட்டுமே கிடைக்கும்.
சிட்டி பேங்க் கிரெடிட் கார்டைப் பயன்படுத்துபவர்களுக்கு முக்கியமான தகவல் இது. சிட்டி பேங்கின் கிரெடிட் கார்டு வணிகத்தை ஆக்சிஸ் பேங்க் வாங்கிவிட்டதால், அனைத்து கணக்குகளும் ஜூலை 15, 2024க்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஆக்சிஸ் வங்கி தெரிவித்துள்ளது.
பொறுப்புத் துறப்பு: இணையத்தில் உள்ள தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது