Saturn Transit: சனி பகவான் நீதியின் கடவுள் என்பதால் ஜோதிடத்தில் அவருக்கு மிக முக்கியமான இடம் கொடுக்கப்பட்டுள்ளது. சனி கர்மவினைக்கு ஏற்ப பலன்களை கொடுத்து, கண் இமைக்கும் நேரத்தில் மனிதர்களின் விதியை மாற்றுகிறார். சனி ஒரு அரசனை ஆண்டியாகவும், ஒரு எளிய ஏழையை அரசனாகவும் மாற்றும் வல்லமை கொண்டவர். அக்டோபர் 23, 2022 அன்று சனி பகவானின் நிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டது. வக்ர நிலையில் இருந்த சனி பகவான் அந்த நாளில் வக்ர நிவர்த்தி அடைந்து தனது இயல்பு நிலைக்கு மாறினார்.
சனி பகவானின் நிலை மாற்றம் 3 ராசிகளில் பஞ்ச மகாபுருஷ ராஜயோகத்தை உருவாக்கியுள்ளது. இது மிகவும் சுபமானதாகும். இந்த மகாபுருஷ ராஜ யோகம் இந்த ராசிக்காரர்களுக்கு பண பலத்தையும் முன்னேற்றத்தையும் தரும். அதிகப்படியான வெற்றிகளை அள்ளித்தரும்.
மகர ராசியில் சனிபகவான் இயல்பு நிலையில் சஞ்சரிக்கவுள்ளதால், மேஷ ராசியில் பஞ்ச மகாபுருஷ ராஜயோகம் உருவாகும். இதனால் இவர்கள் தொழில், பண ரீதியாக சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கக்கூடும்.
தனுசு ராசிக்காரர்களுக்கு மார்கி சனியின் இந்த இயக்கம் சுப பலன்களைத் தரும். இதுவரை நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த தொழிலில் முன்னேற்றம் இப்போது ஏற்படும். அலுவலக பணிகளில் ஈடுபட்டிருக்கும் நபர்களுக்கு பணி இடத்தில், பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கிடைக்கும். லாபம் அதிகரிக்கும்.
ஜோதிட சாஸ்திரப்படி மீன ராசிக்காரர்களுக்கு சனியின் நேரடி சஞ்சாரம் மிகுந்த பலன்களை அளிக்கும். அவர்களின் வருமானம் அதிகரிக்கும். வருமானம் பெருகுவதால் மகிழ்ச்சி அதிகரித்து நிம்மதி கிடைக்கும். பல இடங்களிலிருந்து பண வரவு இருக்கும்.