Shani Asta 2023: வேத ஜோதிடத்தின்படி, ஒவ்வொரு கிரகமும் அதன் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ராசி மற்றும் நிலைகளை மாற்றுகின்றன. சனி ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசிக்க இரண்டரை ஆண்டு காலம் ஆகும். திருக்கணித பஞ்சாங்கத்தின் படி, சனி பகவான் ஜனவரி 17 ஆம் தேதி கும்ப ராசியில் பிரவேசித்தார். அதன்பின்னர், சனி, ஜனவரி 31ஆம் தேதி தனது சொந்த ராசியில் அஸ்தமித்தார். இதைத் தொடர்ந்து மார்ச் 6 ஆம் தேதி அவர் மீண்டும் உதயமாவார்.
பொதுவாக கிரகங்களின் அஸ்தமனம் அசுபமாக கருதப்படுகிறது. சனியின் அஸ்தமன நிலையும், சில ராசிக்காரர்களுக்கு பல வித பிரச்சனைகளை கொண்டு வரும். இவர்களுக்கு மார்ச் 6 ஆம் தெதி வரையிலான காலம் மிகவும் வேதனையாக இருக்கப் போகிறது. அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
ஜோதிட சாஸ்திரத்தின்படி, மேஷ ராசிக்காரர்களின் ஜாதகத்தில் 11வது வீட்டில் சனி பகவான் அஸ்தமமாகியுள்ளார். இது தொழில் மற்றும் கல்வியின் ஸ்தானமாக கருதப்படுகிறது. சனியின் அஸ்தமன நிலையால், மேஷ ராசிக்காரர்களின் தொழில், கல்வியில் தெளிவான பாதிப்பு ஏற்படும்.
கும்ப ராசியில் சனி அஸ்தமனமாகியுள்ளதால், ரிஷப ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன. இந்த காலத்தில் இந்த ராசிக்காரர்கள் பொருளாதார பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
ஜோதிடத்தின் படி, சனி பகவான் மிதுன ராசியின் அதிபதியாகக் கருதப்படுகிறார். இந்த ராசிக்காரர்களின் ஜாதகத்தில் ஒன்பதாம் வீட்டில் சனி அஸ்தமனமாகியுள்ளது. ஆகையால், இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்காது. சில சங்கடங்களை சந்திக்க வேண்டியிருக்கும்.
துலாம் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் சனி அஸ்தமனமாகியுள்ளது. இது கல்வி, காதல் உறவு, சந்ததி ஆகியவற்றின் ஸ்தானமாக கருதப்படுகின்றது. சனியின் அஸ்தமன காலத்தில் துலாம் ராசிக்காரர்கள் கடினமான காலங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.