இரண்டு முறைக்கு மேல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களின் பட்டியல்!

Prime Minister Modi: தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் பிரதமர் நரேந்திர மோடி 3வது முறையாக இன்று பிரதமராக பதவி ஏற்க உள்ளார். உலகம் முழுவதும் 2 முறைக்கு மேல் பதவியேற்றவர்களை பற்றி பார்ப்போம்.

 

1 /6

இரண்டு முறைக்கு மேல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் என்ற பெருமையை பிரதமர் மோடி இன்று பெற உள்ளார். உலக தலைவர்கள் மத்தியில் மோடியின் பெயரும் இடம் பெற உள்ளது.   

2 /6

1932 முதல் 1944 வரை நடந்த நான்கு ஜனாதிபதி தேர்தல்களில் முன்னாள் அமெரிக்க அதிபர் பிராங்க்ளின் வெற்றி பெற்றுள்ளார். இரண்டு முறைக்கு மேல் பதவி வகித்த கடைசி அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட் ஆவார்.  

3 /6

2005 முதல் 2017 வரை தொடர்ந்து நான்கு தேர்தல்களில் வெற்றி பெற்று சாதனை படைத்து இருந்தார் முன்னாள் ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கலின்.   

4 /6

சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ 1968 மற்றும் 1988க்கு இடையில் தொடர்ச்சியாக ஆறு முறை தேர்தலை சந்தித்து அதில் வெற்றி பெற்றுள்ளார்.   

5 /6

இந்தியாவின் முன்னாள் இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேரு தொடர்ந்து மூன்று தேர்தல்களில் வெற்றி பெற்ற ஒரே இந்தியப் பிரதமராக இருந்தார். இந்த சாதனையை இன்று மோடி சமன் செய்ய உள்ளார்.

6 /6

பிரதமர் மோடி இன்று மாலை 7.15 மணிக்கு மூன்றாவது முறையாக இந்திய பிரதமராக பதவியேற்க உள்ளார். ராஷ்டிரபதி பவன் வளாகத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது.