சாலைக்கு வரவிருக்கும் Renault நிறுவனத்தின் எலக்ட்ரிக் கார் First Look

ரெனால்ட் இந்தியா, விரைவில் 14 புதிய மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. அவற்றில் 7 மாடல்கள் மின்சார கார்கள் என்பது குறிப்பிடத்தக்கது....

பிரபல பிரெஞ்சு ஆட்டோமொபைல் நிறுவனமான ரெனால்ட், மின்சார கார்களிலும் கவனம் செலுத்துகிறது. ரெனால்ட் இந்தியா, விரைவில் 14 புதிய மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. அவற்றில் 7 மாடல்கள் மின்சார கார்களாக இருக்கும். எதிர்வரும் காலத்தில் ரெனால்ட் நிறுவனம் மின்சாரம் அல்லது கலப்பின மாடல்களில் அதிக கவனம் செலுத்தும். ரெனால்ட் 5 இ-டெக் புரோட்டோ-டைப் (Renault 5 E-Tech Prototype) காரின் டீஸரை வெளியிட்டு, எதிர்காலத்தில் எந்தவொரு பெரிய கார் உற்பத்தியாளரையும் எதிர்கொள்ள தயாராக உள்ளதாக Renault நிறுவனம் தெரிவித்துள்ளது.

1 /5

ரெனால்ட் 5 இ-டெக் கார் எப்படி இருக்கும்? ரெனால்ட் 5 இ-டெக் (5 E-TECH) கார் உண்மையில் Vasarely 1972 மாடலைப் போல இருப்பதாகத் தெரிகிறது. ஆனால் ரெனால்ட் 5 இ-டெக் கார் எதிர்காலத்தை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இது முழுமையாக மின்சாரத்தில் செயல்படும் கார் என்பது குறிப்பிடத்தக்கது.

2 /5

ரெனால்ட் 5 இ-டெக் கார் 2023 இல் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக இந்த கார் பல முன்னோட்ட சோதனைகளுக்கு உட்படுத்தப்படும். அதே நேரத்தில், ரெனால்ட் நிறுவனத்தின் இந்த கார் சாதாரண மனிதர்களின் பட்ஜெட்டுக்கு ஏற்ப உருவாக்கப்படுவதாக கூறுகிறது. Renault 5 E-TECH கார், மணிக்கு 300 முதல் 400 கிலோமீட்டர் வேகத்தில் இயங்கக்கூடியதாக இருக்கும். 

3 /5

பெரும்பாலான நிறுவனங்கள் தூய்மையான ஆற்றலுக்கு மாறுகின்றன.டெனால்ட் கார்களை ஓட்டுவது சுற்றுச்சூழலுக்கு எந்த வகையிலும் தீங்கு விளைவிக்காது என்பதோடு, விலையும் மலிவாக இருக்கும். நிறுவனம் அடுத்த 5 ஆண்டுகளில் பல மின்சார கார்களை சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த கார்கள் வாகனத் தொழிலின் எதிர்காலமாக பார்க்கப்படுகிறது.  

4 /5

ரெனால்ட் 5 இ-டெக் (Renault 5 E-TECH) கார் உலகின் நம்பர் ஒன் நிறுவனமான டெஸ்லாவின் கார்களுடன் போட்டியிடும், இந்தியாவில் டாடாவின் நெக்ஸன், ஹூண்டாய் மற்றும் இந்தியாவில் மஹிந்திரா போன்றவைக்கும் போட்டிக் கொடுக்கும் Renault 5 E-TECH.

5 /5

தற்போது ரெனால்ட் (Renault) நிறுவனத்தில் க்விட் (Kwid), டஸ்டர் (Duster) மற்றும் ட்ரைபர் (Triber) ஆகியவை இந்தியாவில் கிடைக்கின்றன. இந்த கார்கள் மிகவும் விரும்பப்படுகின்றன. இந்த கார்களில், க்விட் இந்தியாவில் மிகவும் விரும்பப்படுகிறது. இது பட்ஜெட் பிரிவில் மிகவும் பிரபலமான கார். ரெனால்ட் க்விட் இரண்டு எஞ்சின் விருப்பங்களைக் கொண்டுள்ளது, முதலாவது 0.8 லிட்டர் 3 சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் ஆகும், இது 54 ஹெச்பி அதிகபட்ச சக்தியையும் 72 நியூட்டன் மீட்டர் பீக் டார்க்கையும் உற்பத்தி செய்கிறது.