ஜனவரி 17 சனி பெயர்ச்சி 2023: யாருக்கு சூப்பர்? யாருக்கு சுமார்?

சனி பகவான் இன்னும் சில மாதங்களில் மகர ராசியில் இருந்து கும்பம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நல்ல பலன், எந்த ராசிக்காரர்களுக்கு சுமாரான பலன் என்று பார்க்கலாம். பரிகாரக்கோவில்களையும் பார்க்கலாம்.

1 /12

மேஷ ராசி: லாப சனி காலம் 100 சதவிகிதம் நன்மை உண்டாகும். தொட்டது துலங்கும். மேஷ ராசியினருக்கு எதிர்பாராத நேரத்தில் திடீர் அதிர்ஷ்டம் கிடைக்கும். புதிய விஷயங்களை செய்யவும், திட்டங்களை செயல்படுத்தவும் சாதகமான காலமாக இருக்கும்.

2 /12

ரிஷப ராசி: ரிஷப ராசிக்கு இந்த சனி பெயர்ச்சி மிகவும் சிறப்பான பலனைத் தரக்கூடியவராக இருப்பார். தொழில் சனி காலம் தொடங்கும் காலம் வேலையில் முன்னேற்றம் உண்டாகும்.

3 /12

மிதுன ராசி: பாக்யசனி காலம் என்பதால் பட்ட கஷ்டங்கள் முடிவுக்கு வரும். உத்தியோகம், தொழில், வியாபாரத்தில் நீங்கள் முன்னெடுக்கக்கூடிய திட்டங்கள் சிறப்பாக நிறைவேறி வெற்றி கிடைக்கும். எதிலும் நல்ல லாபத்தை எதிர்பார்க்க முடியும்.

4 /12

கடக ராசி: கண்டக சனியில் இருந்து தப்பிய கடக ராசிக்காரர்களுக்கு அஷ்டம சனியின் ஆதிக்கம் ஆரம்பிக்கப்போகிறது. கணவன் மனைவி இடையேயான சிக்கல் அதிகரிக்கும். கூட்டுத்தொழிலில் கவனம் தேவை.

5 /12

சிம்ம ராசி: கண்டச்சனி காலம் என்று கவலை வேண்டாம். சச மகா யோகம் கை கூடி வரப்போகிறது. நீங்கள் சேவை சார்ந்தவராகவும் கடின உழைப்புடனும் இருக்க வேண்டியது அவசியம். இது உங்களுக்கு வெற்றியைத் தரலாம். இந்த காலகட்டத்தை சிறந்த எதிர்காலத்திற்கான அடித்தளமாக பயன்படுத்தவும்.

6 /12

கன்னி ராசி: உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். நீங்கள் பட்ட கஷ்டங்களுக்கு விடிவு காலம் பிறக்கப்போகிறது.

7 /12

துலாம் ராசி: சனிபகவான் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி என்பதால் உங்கள் அறிவும் திறமையும் வளர்ச்சி அடையும். பிள்ளைகள் மூலம் முன்னேற்றம் அதிகரிக்கும். நிறைய நல்லது நடக்கப்போகிறது.

8 /12

விருச்சிக ராசி: வண்டி வாகனங்களில் போகும் போது கவனம். வண்டி வாகனம் வாங்கும் போதும் விழிப்புணர்வு அவசியம். அர்த்தாஷ்டம சனி என்பதால் கஷ்டங்கள் வரத்தான் செய்யும். சனி பகவான் பார்வையும் உங்கள் ராசிக்கு கிடைக்கிறது.

9 /12

தனுசு ராசி: இந்த ராசிக்காரர்களின் கஷ்டங்கள், கவலைகள் முடிவுக்கு வரப்போகிறது. குடும்ப பாவத்தில் இருந்த சனி விலகுவதால் திருமணத்திற்கு முயற்சி செய்யலாம். பிரிந்து போன குடும்ப உறவுகள் ஒன்று சேர்வார்கள். தொழில், வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். வெற்றியும் முன்னேற்றமும் தேடி வரும். பண ஆதாயத்தால் கௌரவம் உயரும்.

10 /12

மகர ராசி: மகர ராசிக்காரர்களுக்கு ஜென்ம சனி முடிந்து பாத சனி ஆரம்பிக்கிறது. பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. சிலருக்கு வாக்கினால் பிரச்சினை உண்டாகும். பண பிரச்சினையில் சிக்க வைக்கும்.

11 /12

கும்ப ராசி: கும்ப ராசிக்காரர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வண்டி வாகனங்களில் பயணிக்கும் போது எச்சரிக்கையும் விழிப்புணர்வும் அவசியம்.  

12 /12

மீன ராசி: திடீர் விரைய செலவுகள் வரும். உங்களுடைய பேச்சில் கவனமும் நிதானம் தேவை.