Puducherry Latest News: புதுச்சேரியில் பல ஆண்டுகளாக மூடப்பட்டுள்ள ரேஷன் கடைகளை திறக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதுக்குறித்து செய்தியாளர்களுடன் பேசிய முதல்வர் ரங்கசாமி, "புதுச்சேரியில் மக்கள் அனைவரும் எதிர்பார்க்கக்கூடிய ரேஷன் கடைகளை திறக்க அரசு முடிவு செய்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
தீபாவளிக்கு முன்பாக ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு, முதலில் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் தலா 2 கிலோ சர்க்கரை மற்றும் 10 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். அதுமட்டுமில்லாமல் ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஒரு மாத சம்பளம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்.
இந்த ரேஷன் கடை திறப்புக்காக முதற்கட்டமாக ஒரு கோடியே 45 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ரேஷன் பொருட்களை வீடு தேடிக் கொண்டு செல்லவும் அரசு ஆலோசித்து வருகின்றது என்று அவர் கூறினார்.
மாநில அந்தஸ்து குறித்து மத்திய அரசுக்கு தீர்மானம் அனுப்பப்பட்டுள்ளது என்றும், இது குறித்து பிரதமரை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளோம் எனவும் முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.
எனவே நம்முடைய மக்கள் அனைவரும் எதிர்பார்க்கின்ற ரேஷன் கடைகளையும், நியாயவிலை கடைகளையும் திறக்க ஏற்பாடு செய்திருக்கின்றது. முதலில் அந்த நியாயவிலை கடைகளில் இரண்டு கிலோ சர்க்கரையையும், 10 கிலோ அரிசியும் தீபாவளிக்காக இலவசமாக வழங்கப்படும் எனக் கூறினார்.
மேலும் படிக்க - பென்ஷன் தேதியில் மாற்றம்.. வங்கிகளுக்கு மத்திய நிதி அமைச்சகம் போட்ட அதிரடி உத்தரவு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ